Spotlightவிமர்சனங்கள்

காதல் என்பது பொதுவுடமை – விமர்சனம் 3.5/5

ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் அவர்களின் இயக்கத்தில் லிஜோமோல், வினித், ரோகிணி, கலேஷ், தீபா, அனுஷா உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வெளிவரும் திரைப்படம் தான் “காதல் என்பது பொதுவுடமை”.

இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ஸ்ரீசரவணன். மேலும், இசையமைத்திருக்கிறார் கண்ணன் நாராயணன்.

படத்தினை வெளியீடுகிறார் BOFTA G. தனஞ்ஜெயன். தயாரிப்பு: Jeo baby , Mankind cinemas,Symmetry cinemas, Niths production.

கதைக்குள் பயணித்துவிடலாம்….

தந்தை வினித் வேறு ஒரு பெண்ணுடன் சென்றுவிட்டதால், தாய் ரோகிணியின் அரவணைப்பில் வளர்கிறார் லிஜோமோல்.

ரோகிணி மீது லிஜோமோலும், லிஜோ மீது ரோகிணி அளவுகடந்த பாசத்தை வைத்துள்ளனர். சிங்கிள் மதராக தனது மகளை வளர்த்து வருகிறார் ரோகிணி.

இந்நிலையில், தான் ஒருவரை காதலிப்பதாக லிஜோ தனது அம்மாவிடம் கூறுகிறார். ரோகிணியும் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறார்.

காதலிப்பவரை வீட்டிற்கு அழைத்துவா என்றும் கூறுகிறார் ரோகிணி. அந்தநாள் வர, வீட்டிற்கு கலேஷும் அனுஷாவும் வருகின்றனர்.

கலேஷ் தான் தனது மகள் தேர்ந்தெடுத்த காதலன் என்று ரோகிணி நினைத்திருக்க, சட்டென அனுஷாவும் தானும் காதலிப்பதாக ரோகிணியிடம் கூறுகிறார் லிஜோ.

பெண்ணும் பெண்ணும் காதலா.?? இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்து அனுஷாவை வீட்டை விட்டு விரட்டுகிறார் ரோகிணி.

இதனால் கோபமடைகிறார் லிஜோ. இறுதியாக லிஜோ – அனுஷாவின் காதலை ரோகிணி ஏற்றுக் கொண்டாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.

தன்னுடைய இயல்பான நடிப்பால் அனைவரையும் வெகுவாக கவர்ந்திருக்கிறார் நாயகி லிஜோ மோல். கண்களால் கவிதைகள் பேசுவது போன்று, பல வசனங்களை தனது பார்வையிலேயே வீசி விட்டுச் செல்கிறார். ஜெய் பீம் படத்திற்குப் பிறகு ஒரு தரமான நடிப்பை லிஜோவிடம் கண்டது மகிழ்ச்சி.

தனது அனுபவ நடிப்பால் படம் பார்க்கும் ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்திருக்கிறார் நடிகை ரோகிணி. தனது மகள் ஒரே பாலின காதலில் விழுந்ததை ஏற்றுக் கொள்ள முடியாமல் விதும்பி நிற்கும் தருணத்தில் கண்களில் ஈரத்தை எட்டிப் பார்க்க வைத்து விடுகிறார். அதிலும், ஓரினபால் காதல் என்று தெரியாமல் படத்தின் முதல் 20 நிமிடத்தில் ரோகிணி கடந்த காட்சிகள் சற்று பக்..பக்… தான்..

நீண்ட நாட்களுக்குப் பிறகு திரையில் பிரகாஷமாக தெரிகிறார் நடிகர் வினித். கதாபாத்திரத்தை நன்றாக உணர்ந்து கொண்டு வசனங்களை கடத்திய விதம் அருமை.

தீபாவின் செயல்கள் ஆங்காங்கே சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது. அதிலும், ரோகிணியிடம் இருந்து 500 ரூபாய் வாங்கும் காட்சி கைதட்ட வைத்தது.

மேலும், கலேஷ் மற்றும் அனுஷா இருவரும் கதாபாத்திரங்களை நன்கு உணர்ந்து தங்களது கேரக்டர்களை செய்து முடித்திருக்கிறார்கள். இருவருக்குமான புரிதலை அனுஷா கூறிய விதம் அப்ளாஷ்.

தமிழ் சினிமாவில் ஓரின பால் காதலர்களின் படங்கள் அநேகமாக வந்திருந்தாலும், இந்த மாதிரியான ஒரு நீட்&க்ளீன் படத்தை இதுவரை பார்த்ததில்லை. எந்தவொரு ஆபாச காட்சிகளும் இல்லாமல் தெளிவான நீரோட்டம் போல காதலை மிக அழகாக கூறியிருக்கிறார் இயக்குனர்.

தனக்கு எந்த இடத்தில் காதல் வந்தது என்பதையும் ஆண் பெண் காதலும் ஓரின பால் காதலும் ஒன்று தான் என்று தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தும் இடங்களில் இயக்குனர் வசனங்களில் விளையாடியிருக்கிறார்.

படத்தின் மற்றொரு மிகப்பெரும் பலம் என்றால் அது கதை நடக்கும் வீடு. அழகிய சூழலும் காதலுக்கு மிக முக்கியம் என்பதை உணர்ந்திருக்கிறார் இயக்குனர்.

இசை மற்றும் ஒளிப்பதிவு இரண்டுமே படத்திற்கு பெரிதாக கைகொடுத்திருக்கிறார்.

படத்தொகுப்பு ஷார்ப்.

காதல் என்பது பொதுவுடமை – காதல் கவிதை

Facebook Comments

Related Articles

Back to top button