ரஜினியும் கமலும் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருந்து ஒரே நேரத்தில் அரசியலுக்கு வந்து இருக்கிறார்கள். இருவருக்கிடையேயும் நேரடியாக போட்டி ஏற்படும் சூழல் உருவாகி இருக்கிறது. திரைத்துறையில் நண்பர்களாக இருந்த எம்ஜிஆரும், கருணாநிதியும் அரசியலில் எதிரிகளாக மாறியது போல, வருங்காலத்தில் ரஜினியும் கமலும் மாற வாய்ப்பு இருக்கிறதா? என்று கமலிடம் கேட்டதற்கு ‘அவருடனான நட்பு எப்போதும் மாறாது. அதே நேரம் அவரது கொள்கைகள் மாறும்போது நானும் மாறுவேன்.
கொள்கை விஷயத்தில் என் அண்ணனை கூட நான் விட்டு வைக்க மாட்டேன். அப்படிபட்ட சூழ்நிலை அமைந்தால் களத்தில் சந்திக்க தயார்’ என்று கூறினார். கமலின் அண்ணன் சாருஹாசன் கமலால் முதல்வர் ஆக முடியாது என்று காட்டமாக விமர்சிப்பதை பற்றி கேட்டதற்கு ’நான் சினிமாவுக்கு செல்கிறேன் என்றபோது, நீ சாப்பாட்டுக்கு என்ன செய்வாய்? என்ற கேட்டார். இப்போது நன்றாக சாப்பிடும் வசதியை ரசிகர்கள் கொடுத்து இருக்கிறார்கள். தேர்தலில், அரசியல் செயல்பாடுகளில்மக்கள் நீதி மய்யம் பெறும் வெற்றி தான் அவருக்கு பதிலாக அமையும்’ என்றார்.