
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க தொடர்ந்து நான்காவது முறையாக இணைந்து உருவான படம் தான் ‘அசுரன்’. இப்படம் இம்மாதம் 4ஆம் தேதி திரைக்கு வந்தது.
படம் வெளியாகி மிகப்பெரும் அசுர வெற்றியை பெற்றது. இந்நிலையில், பல நட்சத்திரங்கள் திரையுலக பிரபலங்கள் பலரும் இப்படத்தை பெரிதும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில், பாலிவுட் பிரபல இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் இருக்கும் கரண் ஜோகர் இந்த படம் குறித்து ட்வீட் செய்துள்ளார்.
அதில், “ என்ன ஒரு அருமையான படம் அசுரன். இந்த படம் முழுவதுமே நமக்கு ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. வெற்றிமாறனின் படைப்பை பார்த்தும், கதை சொல்லும் யுக்தியை கண்டும் வியக்கின்றேன். தனுஷின் உறுதியான நடிப்பு, வேறு யாரையும் அந்த நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. தயவு செய்து படத்தை அனைவரும் பாருங்கள். இது சினிமாவின் வெற்றி” என்று பதிவிட்டுள்ளார்.
https://twitter.com/karanjohar/status/1186376531137839104?s=20





