
மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர், ஆனந்தி நடிப்பில் உருவாகியுள்ளது ‘பரியேறும் பெருமாள்’. இப்படத்தினை நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் பா ரஞ்சித் தயாரித்துள்ளார்.
வரும் 28ஆம் தேதி படம் திரைக்கு வர இருக்கிறது. கிராமத்து வாசனையுடன், ஒரு புரட்சியை ஏற்படுத்தும் விதமாக உருவாகியுள்ள இப்படம் அனைத்து தரப்பு மக்களிடையேயும் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் பட்டி தொட்டி வரை நல்ல ஒரு வரவேற்பை பெற்றுள்ளது.
இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘கருப்பி.. என் கருப்பி..’ பாடல் யூ-டியூப் பக்கத்தில் 1 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
Facebook Comments





