Spotlightசினிமா

”கூர்மன்” என்ற படத் தலைப்பிற்காகவே பாராட்டுகிறேன் – பாடலாசிரியர் உமா தேவி!!

MK Entertainment தயாரிப்பில் இயக்குநர் பிரையன் B. ஜார்ஜ் இயக்கத்தில் ராஜாஜி, ஜனனி ஐயர், பாலசரவணன் நடிப்பில், உருவாகியுள்ள, சைக்கலாஜிக்கல், திரில்லர் திரைப்படம் “கூர்மன்”. இதன் கதை மனதில் உள்ளதை கண்டுபிடிக்கும் ஒரு பாத்திரத்ததை முதன்மை பாத்திரமாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. மாறுப்பட்ட பாணியில் வித்தியாசமான திரைக்கதையில் உருவாகியுள்ள இப்படம் விரைவில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இப்படத்தின் இசை விழா இன்று படக்குழுவினர் மற்றும் பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிகையாளர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது.

இவ்விழாவினில் முதலில் படக்குழுவினர் மனதில் உள்ளதை அறியும் மெண்டலிஸ்ட் அதை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதை, பார்வையாளர்களுக்கு ஒரு சிறிய டெமோவாக, பார்வையாளர்களிலிருந்தே ஒருவரை அழைத்து, மனதில் நினைப்பதை கண்டுப்டிக்கும் நிகழ்வினை செய்துகாட்டினர். இதனை பார்த்த பார்வையாளர்கள் அனைவரும் ஆச்சர்யத்தில் மூழ்கினர்.

இதனை தொடர்ந்து இப்படம் மூலம் மக்கள் தொடர்பாளர்களாக அறிமுகமாகும் பரணி அழகிரி மற்றும் திருமுருகன் ஆகியோருக்கு மக்கள் தொடர்பாளர் சங்கம் சார்பாக டைமண்ட் பாபு தலைமையில் மரியாதை செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து நடந்த விழாவினில்

நடிகர் பாலசரவணன் பேசியதாவது…

கூர்மன் தலைப்பே வித்தியாசமானது, இங்கு நடந்த மெண்டலிஸ்ட் நிகழ்வும் வித்தியாசமாக இருந்தது. இதைப்போலவே படத்தின் திரைக்கதையும் உருவாக்கமும் மிக வித்தியாசமாக இருந்தது. இந்த டீமும் வித்தியாசமானவர்கள் தான். இந்தப்படத்தில் இயக்குநரிடம் நிறைய கற்றுக்கொண்டேன். இந்தப்படத்தில் முதல்முறையாக கொஞ்சம் வயதானவராக வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ளேன், எங்களுடன் ஒரு நாயும் நடித்தது அது இப்போது இல்லை என்பது வருத்தமாக உள்ளது. நண்பன் ராஜாஜியுடன் நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது. படம் மிக அற்புதமாக வந்துள்ளது, அனைவரும் திரையரங்கில் சென்று பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகர் முருகானந்தம் பேசியதாவது…
கூர்மன் படத்தில் சின்ன கேரக்டர் தான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது, ஆனாலும் நடித்தேன். அதற்கு காரணம் தயாரிப்பாளர் தான், மதன் மிகவும் நல்ல தயாரிப்பாளர். ஒரு படம் தோற்றால் யாருக்கு வேண்டுமானாஅலும் வாய்ப்பு மீண்டும் கிடைக்கும் ஆனால் தயாரிப்பாளருக்கு வாய்ப்பு கிடைக்காது. அவர் ஜெயிக்க வேண்டும். நண்பன் ராஜாஜி அவருடன் எங்கிட்ட மோதேதே படம் செய்துள்ளேன். இப்படத்தில் நன்றாக நடித்துள்ளார். இயக்குநர் கத்தி எடுத்து குத்தப்போறாங்க என்பதையே, சத்தமே இல்லாமல் அமைதியாக சொல்வார். படத்தை அழகாக எடுத்துள்ளார் இப்படத்தில் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. எல்லோருக்கும் வாழ்த்துகள் நன்றி.

நடிகர் ஆடுகளம் நரேன் பேசியதாவது..

கூர்மன் பிஜு கதை சொன்னபோது அவனிடம் எப்ப வரனும்னு சொல்லு வர்றேன் என்று சொன்னேன், அவனை எனக்கு நன்றாக தெரியும். ஒரு சிறு காட்சிக்கு பின்னால் அடுக்கடுக்காக நிறைய விசயங்கள் வைத்திருந்தார். எனக்கு புரிய கஷ்டமாக இருந்தது. போலீஸ் வேடம் நிறைய செய்திருந்தாலும் இது வித்தியாசமாக இருந்தது. கூட நடித்தவர்கள் அனைவரும் கேஷிவலாக நடித்தார்கள், எல்லோருக்கும் வாழ்த்துக்கள் இது நல்ல பொழுது போக்கு படமாக இருக்கும். படம் வற்றி பெற வாழ்த்துகள்.

எடிட்டர் தேவராஜ் பேசியதாவது..
படத்தில் வாய்ப்பு தந்த தயாரிப்பாளர் மதன் மற்றும் இயக்குநர் பிஜுவுஜ்கு நன்றி. பிஜுவும் நானும் 12 வருட நண்பர். மற்ற படத்திற்கும் இப்படத்திற்கும் புட்டேஜிலேயே நிறைய வித்தியாசம் இருந்தது. எடிட்டிங்கில் நான் செய்ய வேண்டியதை திரைக்கதையில் அவரே வைத்திருந்தார். படம் நன்றாக வந்துள்ளது படம் வெற்றி பெற ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகர் பிரவீன் பேசியதாவது….
இந்தப்படம் அமைந்தது மகிழ்ச்சி. டிரிப் படத்திற்கு பிறகு கிடைத்த இரண்டாவது வாய்ப்பு. மதன் எப்போதோ சொன்னது, படம் செய்யும் போது என்னை கூப்பிட்டு வாய்ப்பு தந்தார். இதில் இரண்டவது லீட் மாதிரி ஒரு முக்கியமான வேடம், கேட்டபோதே இதில் நடிக்க வேண்டும் என முடிவு செய்து விட்டேன், என்னுடன் நடித்த அனைவரும் அருமையாக நடித்தார்கள். ராஜாஜி, பாலாசரவணன் இருவரும் நிறைய படங்கள் நடிப்பவர்கள் என்னை ஆதரித்தது மகிழ்ச்சியாக இருந்தது.
இந்தப்படத்தை கஷ்டப்பட்டு எடுத்திருக்கிறார் மதன், இந்தப்படம் பெரிய வெற்றி பெற வேண்டும் நன்றி.

சூப்பர் குட் சுப்பிரமணி பேசியதாவது…

சமீபத்தில் உலகம் முழுக்க வெற்றி பெற்ற படம் ஜெய்பீம், அது கூடிய சீக்கிரத்தில் ஆஸ்கர் பெறும், அந்தப்படத்தில் எனக்கு ஒரு அடையாளம் கிடைத்தது அந்தப்படம் போல் இந்தப்படமும் மிகப்பெரிய வெற்றிபெறும். பிஜுவை உதவி இயக்குநராக பல படங்களில் பார்த்திருக்கிறேன். அவர் உழைப்பு தெரியும். அவர் கண்டிப்பாக ஜெயிக்க வேண்டும். ஜெயிப்பார் நன்றி.

எக்ஸிக்யூட்டிவ் புரடியூசர் சதீஷ் பேசியதாவது…

என்னுடன் பயணித்த என் குழுவிற்கும், அனைவருக்கும் நன்றி. இந்தப்படத்தை அனைவரும் கடுமையாக உழைத்து உருவாக்கியிருக்கிறார்கள், இந்தப்படத்தை விரைவில் திரைக்கு கொண்டு வந்து விடுவோம் படத்தை பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.

பாடலாசொரியர் உமா தேவி பேசியதாவது…

கூர்மன் என இலக்கிய விகுதியை, தமிழுக்கு தந்திருக்கும் குழுவிற்கு என் நன்றிகள். இப்படத்தில் இரண்டு பாடல்கள் எழுதியுள்ளேன். பிரிட்டோ சந்தோஷ் நாரயணன் மூலம் அறிமுகமானவர், அவரது இசை வித்தியாசமாக இருந்தது. கூர்மனில் வரும் இரண்டு பாடல்களும் எல்லோருக்கும் பிடிக்கும். ஆம்பல் பூ எனும் பாடல் திவாகர் வைசாலி பாடியுள்ளார்கள், இன்னொரு பாடல் பிரதீப் பாடியுள்ளார். நாசூக்காக வேலை வாங்குவதில் இந்தக்குழு கில்லாடி, பொறுப்பை என்னிடம் ஒப்படைத்து, பாடலை கவிதையாய் வேண்டுமென எழுதி வாங்கினார்கள். பாடலும் படமும் நன்றாக வந்துள்ளது. இந்தப்பாடல்களுக்கு ஆதரவு தந்து வெற்றி பெற செய்வீர்கள் என நம்புகிறேன் நன்றி

இசையமைப்பாளர் டோனி பிரிட்டோ பேசியதாவது…

தயாரிப்பாளர் இருவருக்கும் நன்றி. பாடல் இசை பற்றி இயக்குநரிடம் கேட்டால் அவர் என்ன நினைக்கிறார் என்பதே தெரியாது, அவர் உதவியாளர்களிடம் கேட்டால் தான் தெரியும், நான் கொடுத்த முதல் சில டியூன்களே அவர்களுக்கு பிடித்திருந்தது அது எனக்கு சந்தோஷமாக இருந்தது. இரண்டு பாடல்களுமே உமாதேவி மேடம் கரக்சனே சொல்ல முடியாமல் எழுதி தந்துவிட்டார். இன்னொரு பாடலை பிஜுவே எழுதி விட்டார். இந்தப்படத்தில் பாடலை கேட்டு, அவரது கருத்துக்கள் கூறி, எனக்கு வழிகாட்டிய சந்தோஷ் நாராயணன் சாருக்கு நன்றி. பாடல் பிடித்திருந்தால், ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகர் ராஜாஜி பேசியதாவது…

நன்றி சொல்லும் மேடையாக இதை நினைத்துகொள்கிறேன். MK Entertainment தயாரிப்பாளர் ‘ தான் மட்டும் நல்லாருக்கனும்னு நினைப்பவர் அல்ல தன்னை சுற்றியிருக்கும் எல்லோரும் நல்லாயிருக்க வேண்டும் என்று நினைப்பவர்’ நான் நன்றாக இருக்க வேண்டுமென இந்தக்கதை கேட்டவுடன் என்னை அழைத்து நடிக்க சொன்னார். சுரேஷ் இப்படத்தில் பெரும் உதவியாக இருந்தார். இப்படத்தில் ஒரு ஜெர்மன் செப்பர்ட் நாய் நன்றாக நடித்துள்ளது அது இப்போது இல்லை என்பது வருத்தமே. பிஜு என்னை முதலில் சந்தித்தபோது ஆடிசன் பண்ணலாம் என்றார் ஒண்ணுல்ல, இத பண்ணா போதும்னு சொல்லியே தலைகீழாக நிற்க வைத்தார், படத்தில் நன்றாக வேலை வாங்கினார்.

படத்தை அருமையாக எடுத்துள்ளார். இசையமைப்பாளர் டோனிஜி பின்னணி இசையில் கலக்கியுள்ளார் அவருக்கு வாழ்த்துக்கள், இந்தப்படத்தில் கேரக்டர் ரொம்ப முக்கியம் நரேன் சார் நிறைய சொல்லிக்கொடுத்தார். பாலசரவணன் உடன் வேலை செய்தது மகிழ்ச்சியாக இருந்தது. முருகானந்தம் இப்போது ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் எங்கள் படத்திற்கு நேரம் ஒதுக்கி நடித்து தந்தார் என் நெருங்கிய நண்பர். படத்தில் வேலை செய்த அனைவருக்கும் நன்றி. இந்தப்படம் ஒரு தரமான படமாக இருக்கும் வெளியீட்டுக்கான வேலைகள் நடந்து வருகிறது. மிகச்சிறந்த படமாக இருக்கும் நீங்கள் ஆதரவு தருவீர்கள் என நம்புகிறேன் நன்றி.

இயக்குநர் பிரையன் B. ஜார்ஜ் பேசியதாவது….

எல்லோரும் இப்படத்தில் அவரவர் வேலையை ஈஸியாக செய்து தந்தார்கள், அதனால் தான் இந்தப்படம் நடந்தது. நான் எதுவும் செய்யவில்லை. ஒரு தயாரிப்பாளர் 40 நிமிடத்தில் இந்தப்படத்தின் கதையை கேட்டு ஓகே சொன்னார். சினிமாவில் அது அவ்வளவு எளிதாக நடக்காது அதற்காக மதன் சாருக்கு நன்றி. இந்தப்படத்தை சிக்கல்
இல்லாமல் உருவாக்க காரணமாக இருந்த சுரேஷ் சாருக்கு நன்றி. நாயகன் ராஜாஜி தலைகீழாக நிற்க வைத்தேன் என்று சொன்னார். ஆனால் நான் என்ன சொன்னாலும் அதை மறுபேச்சில்லாமல் செய்தார்.

தலைகீழாக நிற்பாரா என நினைத்தேன் ஆனால் நின்று அசத்தி விட்டார். ஜனனி ஐயர் தமிழ் பேசும் நாயகி வேண்டுமென தான் அவரை நடிக்க வைத்தேன். ஒரு நாளில் நான்கைந்து காட்சியெல்லாம் நடித்தார். அட்டகாசமாக நடித்தார். நரேன் சார் எனக்காக நடியுங்கள் என்றேன், உனக்காக நடிக்கிறேன் என நடித்து தந்தார். உமா தேவி மேடம் அட்டகாசமாக பாடல் எழுதி தந்துள்ளார். அவருக்கு நன்றி. பிரிட்டோ அருமையாக இசையை தந்துள்ளார். ஒரு நல்ல படம் ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகை ஜனனி ஐயர் பேசியதாவது…

பிரையன் B. ஜார்ஜை தெகிடி படத்திலிருந்தே தெரியும், அவரிடம் நீங்கள் படம் எடுக்கும்போது வேறு யாரையாவது நாயகியாக போட்டால் சண்டை போடுவேன் என்றேன் ஆனால் உண்மையிலேயே என்னை நடிக்க வைத்துவிட்டார். இந்தக்கதையே வித்தியாசமாக இருந்தது என்று சொன்னால் அது வழக்கமாக இருக்கும், ஆனால் இன்று இங்கு நடந்த நிகழ்வை பார்த்திருந்தால் உங்களுக்கே தெரியும்.

நீங்கள் இங்கு பார்த்த அதே அளவு ஆச்சர்யம் படத்திலும் இருக்கும். படத்தில் ஒரு மேஜிக் நடந்தது ஒரு நாள் 5 காட்சி எடுக்க வேண்டும் ஆனால் அன்று நல்ல மழை, அதனால் மழையில் காட்சியை மாற்றி எடுத்தோம் அப்ப்டியும் மழை மாலை வரை நிற்காமல் பெய்ய வேண்டுமே என தவித்தோம், ஆனால் மேஜிக்காக கடவுள் ஆசிர்வாதத்தில் மழை நிற்காமல் பெய்தது. அந்த ஆசிர்வாதம் படத்திற்கும் கிடைக்க வேண்டும். படம் பாருங்கள் பிடிக்கும் நன்றி.

இப்படத்தின் இசைத்தட்டை நடிகர் நரேன் வெளியிட நடிகை ஜனனி ஐயர் உடன் படக்குழுவினர் பெற்றுக்கொண்டனர்.

தொழில்நுட்ப குழு விபரம்
எழுத்து இயக்கம் பிரையன் B. ஜார்ஜ்
ஒளிப்பதிவு – சக்தி அர்விந்த்
இசை – டோனி பிரிட்டோ
எடிட்டிங் – S. தேவராஜ்
கலை – கருணாநிதி
ஒலி வடிவமைப்பு – தாமஸ் குரியன்
ஸ்டண்ட் – ஸ்டன்னர் ஷாம்
உடை வடிவமைப்பு – டினா ரோஸாரியோ
விஷுவல் எபெஃக்ட்ஸ் – R.ஜீவரத்தினம்
புரடக்சன் எக்ஸிக்யூட்டிவ் – D.நரசிம்மன்
எக்ஸிக்யூட்டிவ் புரடியூசர் – S.கணேஷ், சதீஷ்பாபு
மேக்கப் – U.K.சசி
ஸ்டில்ஸ் – ஜீகே
மக்கள் தொடர்பு – பரணி அழகிரி, திருமுருகன்
இணை தயாரிப்பு – சுரேஷ் மாரிமுத்து
தயாரிப்பு – MK

Facebook Comments

Related Articles

Back to top button