Spotlightஇந்தியாசினிமாதமிழ்நாடு

2 ரூபாய்க்கு கொரோனா மருந்து… கிருஷ்ணகிரி மருத்துவரின் அசத்தல் கண்டுபிடிப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் டாக்டர் வசந்த குமார். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுத்திருந்தார். அதில், தான் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாகவும், இது குறித்து ஆராய்ச்சி கட்டுரைகளுடன் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு அனுப்பினேன்.

ஆனால், இதுவரை அந்த மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்றும் மனுவை பரிசீலித்து மத்திய, மாநில அரசுகளுக்கு தகுந்த உத்தரவு பிறப்பிக்கும்படி அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு மீது இன்று வீடியோ விசாரணை நடைபெற்றது. `பீட்டா அட்ரெனர்ஜிக் பிளாக்கர்ஸ்’ என்று அழைக்கப்படக் கூடிய இந்த மருந்து, சார்ஸ் மற்றும் கொரோனா வைரஸ் உடல் செல்களில் நுழையவிடாமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது.

இந்த மருந்தின் விலை சுமார் 2 ரூபாய்க்கு கூட நிர்ணயம் செய்ய முடியும். இந்த மருந்தை உட்கொண்டால் கொரோனா அறிகுறி காய்ச்சலாக மாறாது தடுத்துவிடும். அதுமட்டுமல்லாமல் ஏழை, எளிய மக்களுக்கு பயனளிக்கும் என மனுதாரர் சார்பில் வாதிடப்பட்டது.

வாதத்தை கேட்ட நீதிபதிகள், இந்த மருந்து குறித்து ஆய்வு செய்வதற்காக, இதன் மீதான ஆய்வு அறிக்கையை மனுதாரர் மீண்டும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கும், மத்திய அரசுக்கும் அனுப்ப வேண்டும். ஆய்வு அறிக்கையை பரிசீலித்து மருத்துவ கவுன்சிலும், மத்திய அரசும் உரிய முடிவை விரைவாக அறிவிக்க வேண்டும். என்று உத்தரவிட்டனர்.

Facebook Comments

Related Articles

Back to top button