
ஏ ஆர் ராகவேந்திரா இயக்கத்தில் நாகராஜன் கண்ணன், டெல்லி கணேஷ், மு ராமசாமி, காயத்ரி, சாய் தீனா, ஐஸ்வர்யா ரகுபதி, கார்த்திக் சீனிவாசன், ரேகா குமணன், தினேஷ் செல்லையா, மிர்துளா, ப்ரகதீஸ்வரன், ஆண்டனி ஜானகி, முருகன் கோவிந்தசாமி, கோபால், மணிகண்டன் வீரமுத்து உள்ளீட்ட நடிகர்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் “மாயக்கூத்து”.
வசனங்களை நாகராஜ் கண்ணன் எழுத ஒளிப்பதிவு செய்திருக்கிறார் சுந்தர் ராம் கிருஷ்ணன். இசையமைத்திருக்கிறார் அதிதி ஹரிகுமார்.
பல கோடி செலவு செய்து எடுக்கப்படும் படம் ஓரிரு நாட்களிலே திரையரங்குகளை விட்டு தெறித்து ஓடுவதை பார்த்திருக்கிறோம். அதிலும், பாடல்களுக்கு மட்டுமே 90 கோடி செலவு செய்யும் வழக்கமும் இங்கு இருக்கிறது.
இவர்களெல்லாம் வாய்பிளக்க வைக்கும் அளவிற்கு மிகப்பெரும் சாதனை நிகழ்த்திக் காட்டியிருக்கிறது மாயக்கூத்து டீம்.
ஆம், வெறும் 25 லட்சம் ரூபாய் செலவில் ஒரு படத்தை எடுத்து அதை திரைக்குக் கொண்டுவந்திருக்கிறது படக்குழு. திரைக்குக் கொண்டு வந்தது மட்டுமல்லாமல், படம் பார்த்தவர்களின் வாழ்த்துகளையும் மகிழ்ச்சியையும் பெற்றிருக்கிறது.
அப்படி என்ன கதையை இயக்குனர் கொடுத்திருக்கிறார் என்பதை விமர்சனம் மூலம் பார்த்துவிடலாம்.
படத்திலும் எழுத்தாளராகவே வருகிறார் நாகராஜ் கண்ணன். மூன்று கதைகளை எழுதுகிறார். மூன்று கதைகளின் கேரக்டர்களும் நாகராஜ் கண்ணன் முன் நேரில் வந்து நிற்கிறது.
இந்த கேரக்டர்கள் மூலம் நாகராஜ் கண்ணனுக்கு நிறைய பிரச்சனைகள் வருகிறது. அவரது உயிருக்கே ஆபத்து ஏற்படும் அளவிற்கு.
இந்த பிரச்சனையை நாகராஜ் கண்னன் எப்படி கையாண்டார்.? இதிலிருந்து எப்படி தப்பித்தார் என்பதே படத்தின் மீதிக் கதை.
படத்தின் கேரக்டர்களாக வந்திருந்த டெல்லி கணேஷ், மு ராமசாமி, காயத்ரி, சாய் தீனா, ஐஸ்வர்யா ரகுபதி, கார்த்திக் சீனிவாசன், ரேகா குமணன், தினேஷ் செல்லையா, மிர்துளா, ப்ரகதீஸ்வரன், ஆண்டனி ஜானகி, முருகன் கோவிந்தசாமி, கோபால், மணிகண்டன் வீரமுத்து உள்ளிட்ட அனைவருமே கதாபாத்திரங்களாகவே ஜொலித்திருந்தனர்.
கதையின் ஓட்டத்தை சரியாக கையாண்டு அதில் வெற்றிக் கண்டிருக்கிறார் இயக்குனர். ஆபாச காட்சிகள், மது காட்சிகள், அடிதடி காட்சிகள் என கதை அந்த வழியாக இல்லாமல், சமூகத்தில் ஒரு சில மனிதர்களின் பார்வையை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் இயக்குனர்.
ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரும் தூணாக நின்றிருக்கிறது. கதை மற்றும் கதையின் தாக்கம் பலமாக இருந்தால் பட்ஜெட் என்பது ஒரு பெரிய விஷயமே இல்லை என்பதை இப்படம் நிரூபித்திருக்கிறது.
நாகராஜ் கண்ணனின் நடிப்பு படத்திற்கு சற்று கூடுதல் பலம் கொடுத்திருக்கிறது.
மாயக்கூத்து – குறைந்த பட்ஜெட்டில் பிரமாண்ட வெற்றி
Producers: Rahul Deva & Prasad Ramachandran
Co-Producers: Gopichand Vagvala, Sonia Sabharwal & Arjun Sabharwal
Production Houses: Rahul Movie Makers & Abhimanyu Creations
Executive Producer: Rahul Deva
Creative Producer: Sundar Ram Krishnan





