
இயக்கம்: லியோ ஜான் பால்
நடிகர்கள்: விஜய் ஆண்டனி, அஜய் தீஷன், மகாநதி சங்கர், சமுத்திரக்கனி, ராமசந்திரன், பிரிகிடா, தீப்ஷிகா, அர்ச்சனா, கனிமொழி.
ஒளிப்பதிவு: யுவா
இசை: விஜய ஆண்டனி
Production House: Vijay Antony Film Corporation
Producer: Fatima Vijay Antony
கதைப்படி,
இளம்பெண் ஒருவர் உடல்முழுவதும் கருமை நிறத்தில் மாறி, பிணமாக குப்பைத் தொட்டியில் இருந்து கண்டெடுக்கப்படுகிறார். யார் அந்த பெண்ணை கொலை செய்திருப்பார் என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
செய்தித்தாளில் இப்படியொரு சம்பவத்தை படித்த, மும்பை போலீஸ் அதிகாரி விஜய் ஆண்டனி, அந்த வழக்கை தான் விசாரிக்க போலீஸ் தரப்பில் முறையிடுகிறார்.
சென்னை போலீஸ் அதிகாரியான சமுத்திரக்கனி, வழக்கை அன்-அபிஷியலாக விசாரிக்க விஜய் ஆண்டனியிடம் கேட்டுக் கொள்கிறார். விஜய் ஆண்டனியின் மகளும் இதே மாதிரியான முறையில் கொலை செய்யப்பட்டு இறந்து போனதால், சென்னை வழக்கை விசாரிக்க வருகிறார்.
அதுமட்டுமல்லாமல், வில்லனா விஜய் ஆண்டனிக்கு உடலில் ஒருபுறம் முழுவதுமே கருமை நிறமாக காணப்படுக்கிறது.
தனது பாணியில் விசாரணையை துவங்குகிறார் விஜய் ஆண்டனி. சந்தேகத்தின் பேரில் அஜய் தீஷனை கைது செய்கிறார் விஜய் ஆண்டனி.
அஜய் தீஷனிடம் ஒரு அபூர்வ திறமை இருப்பதை அறிகிறார் விஜய் ஆண்டனி. அஜய் தீஷனின் திறமையை வைத்து அந்த கொலைகாரனை விஜய் ஆண்டனி கண்டறிந்தாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.

வழக்காமன நடிப்பை விஜய் ஆண்டனி, இப்படத்திலும் கொடுத்திருக்கிறார். பெண் கொலை செய்யப்படுகிறாள். யார் இந்த கொலை செய்திருப்பார் என்று தனது உடல் மொழியில் மிகவும் பொருத்தமாக தனது விசாரணையை நடத்துகிறார் விஜய் ஆண்டனி.
யாரும் யோசிக்காத ஒரு கதையை கையில் எடுத்து அதை தரமான திரைக்கதை அமைத்து படத்தினை இயக்கியிருக்கிறார் விஜய் ஆண்டனி.
பெண் கொலை செய்யப்படும் விதம், அஜய் தீஷனின் தனித்திறமை, நீரின் முக்கியத்துவம், நீரின் மகத்துவம், நிறத்தை வைத்து பாகுபாடு, என பல கோணங்களில் கதையை நகர்த்தி தனது திறமையை நன்றாகவே வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.
70 சதவீத படம் முடிந்த பிறகு, அதன்பிறகு வரும் கதையின் தொடர்ச்சியாக வில்லனை கொண்டு வந்தது சற்று வித்தியாசமான முயற்சி தான்.
இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான அஜய் தீஷன் நல்லதொரு வரவு தான். உடல் மொழியால் பல இடங்களில் நன்றாகவே ஸ்கோர் செய்திருக்கிறார்.
இன்ஸ்பெக்டராக ப்ரகிடா, போலீஸாக வரும் மகாநதி சங்கர் இருவருமே படத்திற்கு பெரிதாகவே கைகொடுத்திருக்கிறார்கள்.
நாயகி தீப்ஷிகா இப்படத்தில் வித்தியாசமான ஒரு கதாபாத்த்ரிஅத்தில் நடித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறார்.
படத்தின் ஓட்டத்தில் சின்ன சின்ன குறைகள் தென்பட்டாலும், திரைக்கதையின் வேகம் அதையெல்லாம் மறக்க வைக்கிறது.
ஒரு பரபரப்பான க்ரைம் த்ரில்லர் படத்தை கொடுத்துவிட்டோம் என்று இல்லாமல், நீர் மற்றும் இனம் குறித்த பார்வை மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்காக இயக்குனர் லியோ ஜான் பால் அவர்களை வெகுவாகவே பாராட்டலாம்.
விஜய் ஆண்டனியின் இசையில் பின்னணி இசை மிரள வைத்திருக்கிறது. யுவாவின் ஒளிப்பதிவு படத்திற்கு வெளிச்சம் காட்டியிருக்கிறது.





