விமர்சனங்கள்

நோட்டா – விமர்சனம் 2.75/5

ஊழல் வழக்கில் சிக்கிய தமிழக முதல்வர் நாசர், சாமியார் ஒருவரின் பேச்சைக் கேட்டு, தனது மகன் விஜய் தேவர்கொண்டாவை முதல்வராக அறிவிக்கிறார்.

தனது தந்தையின் அரசியல் களத்திற்குள் புகுந்து கொள்ளாமல், லண்டனில் வேலை பார்த்து வந்த விஜய் தேவர்கொண்டா விபத்தால் தமிழக முதல்வராக பொறுப்பேற்கிறார்…

விளையாட்டாக பொறுப்பேற்ற முதல்வர் பதவியால், நாளுக்கு நாள் பல பிரச்சனைகளை விஜய் எதிர்கொள்ள வேண்டிய சூழல் வருகிறது. கலவரம் மற்றும் மழை வெள்ளத்தால் நிரம்பிய ஏரியை திறந்து விடுதல் உள்ளிட்ட சவால்களை
பத்திரிக்கையாளராக வரும் சத்யராஜோடு சேர்ந்து முதல்வர் விஜய் சந்திக்க நேர்கிறது.

இவரது நல்ஆட்சி நாசருக்கு பிடிக்காமல் போக, தந்திரம் செய்து இவரது ஆட்சியை சரிக்க பார்க்கிறார். மேலும், சாமியார் ஒருவர் நாசரின் கருப்பு பணத்தை அபகரிக்க நாசரையும், விஜய்யையும் கொல்ல சதி செய்கிறார்…. இறுதியாக சாமியாரிடம் இருந்து விஜய் தப்பித்தாரா..?? நாசரின் தந்திர வலையில் சிக்காமல் விஜய் தப்பித்தாரா என்பதே படத்தின் மீதிக் கதை..

விஜய் தேவர்கொண்டா தமிழகத்திற்கு நல்ல வரவுதான். நடனம், நடிப்பு என அனைத்திலும் சூப்பர். தமிழகத்தின் இளம்பெண்களின் கனவு கன்னியாக வலம் வரும் இவர், இந்த படத்திற்கு இளைஞர்களின் மத்தியிலும் நல்ல ஒரு வரவேற்பு கிடைத்துள்ளது. எதிர்பார்ப்பு அதிகம் வைத்துவிட்டு கையோடு ஏமாற்றத்தையும் அளித்து விடுகிறார் நாயகன்.

மெஹ்ரீன், சஞ்சனா என இரு கதாநாயகிகள் இருந்தும் அவர்களுக்கு பெரிதாக ஸ்கோப் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.

படத்தில் மிகப்பெரிய நடிப்பு ஆளுமையை வெளிப்படுத்தியுள்ளார் நாசர். அவரோடு சத்யராஜும் தனது பங்கிற்கு வேலையை செய்து முடித்திருக்கிறார். இருவரின் ப்ளாஷ் பேக் காட்சிகள் தான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

ஆங்காங்கே, தமிழக அரசியலில் நடைபெற்ற சில கேளி காமெடிகளை தெளித்துள்ளதால் சிரிப்பு வருகிறது. இருந்தாலும், நமது தமிழக அரசியல் இவ்வளவு சிரிப்புக்கு வந்துவிட்டதே என்ற ஆதங்கமும் ஒருபக்கம்.

கூவத்தூர், சென்னை வெள்ளம், ஸ்டிக்கர் ஒட்டுதல், ஆட்சி செயல்பாடு, ஊழல் இவற்றில் கவனம் செலுத்தி கதையில் கவனம் செலுத்த தவற விட்டுவிட்டார் இயக்குனர்.

சாம் சி எஸ் இசையில் பாடல்கள் எடுபடவில்லை என்றாலும், பின்னனி இசை மிரட்டல்.

” நோட்டா” படத்திற்கு நோட்டை தாராளமாய் செலவு செய்து எடுத்திருந்தால் இன்னும் பிரம்மாண்டமானதாகவும் இருந்திருக்கும், ரசிக்கும்படியாகவும் இருந்திருக்கும்.

நோட்டா – கவனம் செலுத்தியிருக்கலாம்….

Facebook Comments

Related Articles

Back to top button