
இயக்கம்: கலா அல்லூரி
நடிகர்கள்: ஜான்விகா,ஜெய் பாலா, கிரண் பிரதீப், சுதாகர் , ஆடுகளம் நரேன், மனோபாலா, சென்ட்ராயன், சச்சு, அஞ்சலிதேவி, சின்னப் பொண்ணு
ஒளிப்பதிவு -சங்கர் செல்வராஜ்,
இசை – ராஜீஷ்,
பின்னணி இசை – சி.வி. ஹமரா ,
பாடல்கள் -கே ராஜேந்திர சோழன் ,
படத்தொகுப்பு – சி.எஸ்.பிரேம்குமார்
தயாரிப்பு: ஸ்ரீகலா கிரியேஷன்ஸ்.
ஆடுகளம் நரேன் முன்னாள் இராணுவ வீரர். இவரின் மகளாக வருகிறார் ஜான்வி. படிப்பிலும், விளையாட்டிலும், விவசாயத்திலும், நாட்டுப்பற்றிலும் முதன்மை மாணவியாக விளங்குகிறார் ஜான்வி.
தனது தந்தை ராணுவ வீரர் என்பதால், ஜான்விக்கும் நாட்டின் மீதான பற்று அதிகமாகவே இருக்கிறது. தனதுமகளுக்கு துப்பாக்கிச்சுடும் பயிற்சியெல்லாம் எடுத்துத் தருகிறார் நரேன்.
புகைப்படக்காரராக வரும் ராஜேஷ் என்பவருக்கும் ஜான்விக்கும் நல்லதொரு புரிதல் ஏற்படுகிறது.
இந்நிலையில், ஒரு கார் மீது லாரி ஒன்று வேகமாக மோதி விபத்து ஏற்படுகிறது. திட்டமிட்டே இந்த செயலை செய்கின்றனர். இதனை கண்ட ஜான்வி, காரில் இருந்தவரை காப்பாற்றுகிறார்.
இந்த சம்பவத்திற்கு பின்னால் யார் இருக்கிறார்.? அவர்களை ஜான்வியை டார்கெட் செய்வதன் நோக்கம் என்ன.?? ஜான்வியின் கனவு என்னவானது.??? உள்ளிட்ட கேள்விகளுக்கெல்லாம் இரண்டாம் பாதியில் விடை வைத்திருக்கிறார் இயக்குனர்.
மிகவும் எனர்ஜியாகவும் தனது கேரக்டரை மிகவும் பொறுப்புடனும் செய்துமுடித்திருக்கிறார் ஜான்வி. படம் முழுவதிலுமே அழகு தேவதையாக காட்சியளித்து படத்தின் காட்சிகளுக்கு புத்துணர்ச்சி கூட்டியிருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல், பெண்ணாக இந்த சமூகத்தில் என்னென்ன செய்ய வேண்டும்.? எப்படியாக வாழ வேண்டும் எப்படி பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டியிருக்கிறார் ஜான்வி.
படத்தில் நடித்த மற்ற கதாபாத்திரங்களும் தங்களது கேரக்டர்களை நன்றாக உணர்ந்து கொண்டு படத்திற்கு உயிர் கொடுத்திருக்கின்றனர்.
சமூகத்தில் என்ன மாதிரியான லட்சியத்துடன் ஒவ்வொருவரும் வாழ வேண்டும். ? எதை நோக்கி ஓட வேண்டும்.? நாட்டிற்காக நாம் எதை செய்திருக்கிறோம்.? உள்ளிட்ட பல கேள்விகளோடு விடையையும் கொடுத்து அசத்தியிருக்கிறார் இயக்குனர்.
ஒளிப்பதிவு மற்றும் இசை இரண்டுமே படத்திற்கு பெரிதாகவே கைகொடுத்திருக்கிறது.
பரிசு – நாட்டுப்பற்று..





