Spotlightசினிமா

ஆண்மையில்லையா..?? இளையராஜாவிற்கு ’96’ படக்குழுவின் பதிலடி!!

பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் தான் ’96’. படத்தின் வெற்றிக்குக் காரணம் ஆங்காங்கே ஒலித்த இளையராஜாவின் பாடல்கள் தான் என்றுகூட கூறலாம்.

அந்த அளவிற்கு இளையராஜாவின் மெலடி பாடல்கள் படத்தில் மனதை வருடின. இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்ற என்னுடைய பாடல்கள் என்னிடம் முறையான அனுமதி பெறவில்லை என்று கூறி படக்குழுவினருக்கு ஆண்மையில்லையா என கடுமையான வார்த்தைகளால் இளையராஜா படக்குழுவினரை வெளுத்தெடுத்தார்.

இப்பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய 96 படக்குழுவில் பேசிய ஒருவர், இப்படத்தில் இடம்பெற்ற இளையராஜாவின் பாடல்களுக்கு அவரிடம் ராயல்டி பெற்று தான் உபயோகப்படுத்தினோம். என்று கூறியுள்ளார்.

எது எதுவாகினும் இளையராஜாவின் இந்த முறையற்ற பேச்சு பலரையும் முகம் சுழிக்க வைத்திருக்கிறது.

 

 

Facebook Comments

Related Articles

Back to top button