Spotlightசினிமா

அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பாமக இளைஞர் சங்க செயல்வீரர்கள் கூட்டம்!

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக இளைஞர் சங்க செயல்வீரர்கள் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு பாமக மாநில இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்கினார்.

இதில் தமிழகம் முழுவதும் இருந்து அனைத்து மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய அன்புமணி அவர்கள், ‘ நமது திட்டங்கள் அனைத்தும் மக்களிடையே எடுத்துச் செல்ல வேண்டும். விவசாயிகள் நலன் காக்க நம் கட்சி எப்போதும் துணை நிற்கும். நிர்வாகிகள் அனைவரும் களப்பணிகளில் தொடர்ந்து ஈடுபட வேண்டும்.’ என்று கூறினார்.

மேலும், தூத்துக்குடி மாவட்ட இளைஞரணி செயலாளர் வி எம் ரமேஷ் பேசும் போது, ‘எளிய தொண்டனை கூட மேடை ஏற்றி அழகு பார்க்கும் செயல் என் அண்ணன் அன்புமணி ஒருவருக்கே இருக்கிறது. விரைவில் தமிழக தலைமைச் செயலகத்தில் அண்ணன் அன்புமணி அமர வைப்பது தான் நாம் எடுக்கும் உறுதிமொழியாக இருக்கும். தமிழக அரசு இன்று நல்வழியில் சென்று கொண்டிருப்பதற்கு காரணம் நம் அண்ணன் அன்புமணியால் மட்டுமே.’ என்று கூறினார்.

மேலும், விழாவில் ஜி கே மணி, ஏ கே மூர்த்தி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Facebook Comments

Related Articles

Back to top button