
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரும் வசூல் வேட்டை நிகழ்த்திய திரைப்படம் தான் பொன்னியின் செல்வன்.
இப்படத்திற்கு இசையமைத்திருந்தார் ஏ ஆர் ரகுமான். ரவி வர்மன் இப்படத்திற்கான ஒளிப்பதிவை நிகழ்த்தியிருந்தார்.
இசையும் ஒளிப்பதிவும் படத்திற்கு மிகப்பெரும் பலமாக அமைந்திருந்ததால் படம் மிகப்பெரும் வெற்றியும் பெற்றது.
இப்படஹ்ட்தில் இடம் பெற்ற பொன்னி நதி பார்க்கனுமே பாடல் பட்டிதொட்டியெங்கும் பரவியது. இப்பாடல், ஏ ஆர் ரகுமான் குரலில் வெளிவந்தது.
இந்நிலையில் இப்பாடலின் முழு வீடியோ வெளியாகி இணையத்தில் ட்ரெண்டிங் ஆக ஆரம்பித்திருக்கிறது.
Facebook Comments