
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவையும் தாக்கத் துவங்கியுள்ளது.
இந்த கொரோனாவை கட்டுப்படுத்த ஒரே தீர்வு, விலகியிருத்தல் என்பதை முன்னிறுத்தி நாடு முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார் பிரதமர் நரேந்திர மோடி,
இந்த உத்தரவு அமலுக்கு வந்து இன்று மார்ச் 3ஆம் தேதியோடு 10 நாட்கள் ஆகிவிட்டது.
இந்த நிலையில், நாட்டு மக்களுக்கு வீடியோ வாயிலாக மோடி நாடு மக்களுக்கு உரையாற்றினார்.
அதில், ‘ஊரடங்கிற்கு மக்கள் தரும் ஒத்துழைப்புக்கு நன்றி. நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவுக்கு எதிராக யுத்தம் நடத்தி கொண்டிருப்பதற்கு நன்றி.
நாம், எடுக்கும் நடவடிக்கைகள் உலகுக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.
வீட்டில் இருந்தாலும் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம். கொரோனா தொற்றின் இருளை வெளிச்சம் கொண்டு விரட்ட வேண்டும்.
வீட்டில் இருக்கும் மக்கள் அனைவரும் இறைவனின் உருவம்.
வருகிற ஏப்ரல் 5-ல் இரவு 9 மணி முதல் 9 நிமிடங்கள் உங்கள் வீட்டு விளக்கை அணையுங்கள்.
அதற்கு பதிலாக டார்ச், அகல்விளக்கை ஏற்றவேண்டும்.
யாரும் தெருவுக்கு வந்து இதனை செய்ய வேண்டாம். சமூக இடைவெளியை கடைப்பிடியுங்கள்’ என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.





