Spotlightசினிமா

தமிழக மக்கள் என் மீது வைத்த நம்பிக்கை வீணாகாது – ரஜினிகாந்த்!

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உருவாகியுள்ள திரைப்படம் ‘தர்பார்’. இப்படம் வரும் பொங்கல் வெளியீடாக வெளியாக இருக்கிறது.

இந்த படத்தை லைகா தயாரிக்க அனிருத் இசையமைத்துள்ளார்.

இதில் நடிகர் ரஜினிகாந்த் பேசும்போது…

ஏ ஆர் முருகதாஸ் இயக்கிய ரமணா படம் எனக்கு பிடித்தது. பின்னர் கஜினி படம் பார்த்தேன்.

அவர் இயக்கத்தில் நடிக்க ஆசைப்பட்டேன். அது தற்போது தான் நடந்துள்ளது.

இயக்குநர் பாலசந்தர் ஒரு நல்ல நடிகனுக்கு தான் இந்த பெயர் வைக்க வேண்டும் என நினைத்தார். எனக்கு அந்த பெயரை வைத்தார். அவருடைய நம்பிக்கையை காப்பாற்றி இருக்கிறேன்.

ரஜினியை வைத்து படம் எடுத்தால் நஷ்டம் அடையாது என தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் நம்பிக்கை வைத்தனர். அவர்களது நம்பிக்கையும் வீண்போகவில்லை

அது போல் மக்கள் என் மேல் வைத்துள்ள நம்பிக்கையும் வீண் போகாது.

தற்போது அதிகம்பேர் எதிர்மறையாக பேசுகிறார்கள்.

ஆனால் அவர்களிடமும் நாம் அன்பாக இருப்போம். என்னுடைய பிறந்தநாள் இந்த வருடம் முக்கியமான பிறந்த நாள், 70வது பிறந்தநாள். ரசிகர்கள் ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம், அதற்கு பதிலாக ஏழைகளுக்கு உதவுங்கள்.

பல நலத்திட்ட உதவிகளை புரியுங்கள். அனைவரிடமும் அன்பாக இருப்போம்.’ என்று கூறினார்.

Facebook Comments

Related Articles

Back to top button