
ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்தின் உடன் பிறந்த சகோதரி தான் சுதா மகேந்திரன். இவரது கணவர் ஒய் ஜி மகேந்திரன். இவர்களின் மகள் தான் மதுவந்தி. பாஜகவின் செயற்குழு உறுப்பினராக இருக்கிறார்.
அவ்வப்போது பாஜக பற்றி பேசி மீம்ஸ்களில் ட்ரெண்டிங்கில் வலம் வந்து கொண்டிருப்பார்.
சில தினங்களுக்கு முன், மதுவந்தியின் வீடு சீல் வைக்கப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுவந்தி ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு அபார்ட்மெண்டில் சில ஆண்டுகளாக வசித்து வருகிறார். இந்த வீடு வாங்குவதற்காக இந்துஜா லேலண்ட் என்ற தனியார் நிறுவனத்திடம் ஒரு கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளார்.
வாங்கிய கடனுக்கு சில தவணைகள் மட்டுமே வட்டி கட்டியுள்ளார். அதன்பின்னர் வட்டி பணத்தை கட்டாமல் விட்டுவிட்டார் மதுவந்தி.
இதன்பிறகு அந்நிறுவனம் வட்டியோடு அசலையும் சேர்த்து சுமார் ஒரு கோடி 20 லட்சம் ரூபாயை கட்ட நோட்டிஸ் அனுப்பியுள்ளது.
அந்த நோட்டீஸ்க்கு பதில் அளிக்காத காரணத்தால், இந்துஜா லேலண்ட் நிறுவனம் நீதிமன்றத்தை நாடியது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், மதுவந்தியின் வீட்டைக் கைப்பற்றி இந்துஜா லேலண்ட் நிறுவனத்திற்கு ஒப்படைக்க உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து மதுவந்தியின் வீடு சீல் வைக்கப்பட்டு வீடு அந்நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
சீல் வைக்க வந்த அதிகாரிகளிடம் மதுவந்தி கெஞ்சும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகபரவி வருகிறது.
பத்மசேசாஸ்திரி பள்ளியில் முதல் வகுப்பில் சிறுவனை சேர்ப்பதற்காக ராஜகோபால் என்பவரிடம் ஐந்து லட்சம் ரூபாயை பெற்றுக் கொண்டு, பள்ளியில் இடம் வாங்கி கொடுக்காமலும் பணத்தை திருப்பி தராமலும் ஏமாற்றியுள்ளார் மதுவந்தி. இதன்மீதான வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், உதவிக்காக போயஸ் கார்டனுக்கு போன் அடித்துள்ளார் மதுவந்தி. அந்த பக்கம் பேசிய லதா ரஜினிகாந்த், ஏற்கனவே நிறைய உதவிகள் செய்தாச்சி. இனி எதுவும் உதவி செய்ய முடியாது என்று கூறிவிட்டாராம் லதா.
அதுமட்டுமல்லாமல், மதுவந்தியை வீட்டு பக்கமே சேர்க்கக் கூடாது என்று ரஜினி தனது குடும்பத்தினருக்கு கடுமையான கட்டளையிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.