
நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் 169 படம் உருவாக இருப்பதாக அறிவிப்பு வெளியானது.
இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. இப்படத்தின் டைட்டில் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. ரஜினிகாந்தின் 169-வது படத்திற்கு ஜெயிலர் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
பான் இந்தியா படமாக இப்படம் உருவாக இருக்கிறது. ரத்தக் கறை படிந்த அரிவாள் தொங்கும்படியாக போஸ்டர் வெளியாகியிருப்பதால் இது ஒரு கேங்க்ஸ்டர் படமாக இருக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போஸ்டர் இணையத்தில் பெரும் வைரலாக பரவி வருகிறது.
Facebook Comments