
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ளது இடையர்காடு எனும் கிராமம். இக்கிராமத்தில் TDTA Good Shepherd மேல்நிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இது அரசு உதவி பெறும் பள்ளியாகும்.
இப்பள்ளியில், தெய்வகுமார் என்பவரின் மகன் பிரமோத் பாலா(12) படித்து வருகிறார். பிரமோத் பாலாவை வகுப்பாசிரியர் தண்டனை கொடுப்பதாக கூறி பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்ய வைத்துள்ளார்.
இதில், பிரமோத் பாலாவிற்கு எதிர்பாராதவிதமாக கைகளில் ஆசிட் பட, கைகளில் தோல் உரித்து வலியால் துடிதுடித்திருக்கிறார். அதன்பிறகு, சிறுவனை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பள்ளி நிர்வாகத்தின் மீதும், வகுப்பாசிரியர் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவனின் பெற்றோர் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.
துறை ரீதியாக தகுந்த நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட கல்விதுறை அதிகாரிகள் கூறினர்.
இச்சம்பவத்தால் அப்பகுதி பெரும் பரபரப்பு அடைந்தது.





