
தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார் அசீம்.
வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின் தொடர்ந்து பல யூ டியூப் தளத்திற்கு பேட்டியளித்து வருகிறார் அசீம்..
இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சி ஒன்றிற்கு வந்திருந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை கட்டிப் பிடித்து முத்தமழை பொழிந்திருக்கிறார் அசீம்.
இந்த தருணத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் அசீம், “கொள்கை, கோட்பாடு, தத்துவத்தையெல்லாம் தாண்டிய உறவிது!! என்றும் அண்ணன் சீமானின் அன்பு தம்பி தான் நான்’ என பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.
azeem, seeman, bigg boss 6
Facebook Comments