Spotlightவிமர்சனங்கள்

செல்ஃபி விமர்சனம் – 3.5/5

லைப்புலி எஸ் தாணு வழங்க டிஜி ஃபிலிம் கம்பெனி சார்பில் சபரீஷ் தயாரிக்க இன்று வெளியாகியிருக்கும் திரைப்படம் தான் செல்ஃபி.

ஜி வி பிரகாஷ், கெளதம் வாசுதேவ் மேனன், குணாநிதி, வர்ஷா பொல்லம்மா, வித்யா பிரதீப், சந்திரசேகர் உள்ளிட்டோர் நடிக்க உருவாகியிருக்கிறது.

கதைப்படி,

தனது தந்தை வாகை சந்திரசேகரின் வற்புறுத்தலால், தனக்கு பிடிக்காத இன்ஞினியர்ங்க் படிப்பை படிக்கிறார் ஜி வி பிரகாஷ்.

கல்லூரி படிக்க போதுமான பணம் இல்லாததால், பார்ட் டைம் வேலை பார்க்க நினைக்கிறார் ஜி வி பிரகாஷ். இதனால், உடனே பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு கல்லூரிக்கு மாணவர்களை சேர்த்துவிடும் புரோக்கர் வேலையை செய்கிறார் ஜி வி பிரகாஷ். பணம் கொட்டுகிறது.

இதே வேலையை சில ரவுடி கும்பலை தன் கைக்குள் வைத்துக் கொண்டு செய்து வருகிறார் கெளதம் வாசுதேவ் மேனன்.

பணம் அதிகம் சம்பாதிக்க ஆசைப்பட்டு, சற்று அதிகப்படியான ரிஸ்க் எடுத்து மாட்டிக் கொள்கிறார் ஜி வி பிரகாஷ். இந்த விஷயம் கெளதம்க்கு தெரிய வருகிறது.

அதன் பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.

கல்லூரி மாணவனாக ஜி வி பிரகாஷ் தனது நடிப்பில் மிளிர்கிறார். அக்கதாபாத்திரத்திலும் மிகவும் பொருத்தமாக பொருந்தியிருக்கிறார். தன் நண்பனுக்காக அப்பா, காதலியிடம் எதிர்த்து நிற்பது என அனைத்திலும் ஸ்கோர் செய்திருக்கிறார் ஜி வி பிரகாஷ்.

ரவி வர்மா என்ற கேரக்டரில் தனக்கே உரித்தான பாடி லேங்குவெஜில் தனது மிரட்டலான நடிப்பை கொடுத்திருக்கிறார் கெளதம் மேனன். ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு மாதிரியான உடல் அமைப்புகளை காட்டி ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்திருக்கிறார் கெளதம். இவருக்காக அசத்தலான பின்னணி இசையை கொடுத்திருக்கிறார்.

வர்ஷா பொல்லம்மா & வித்யா பிரதீப் இரண்டு கதாநாயகிகளும் படத்திற்கு மிகப்பெரும் பளஸ் தான். நடிப்பிலும் ப்ளஸ் தான்.

செண்டிமெண்ட் நடிப்பில் ரசிகர்களை வெகுவாக கவர்கிறார் அறிமுக நடிகர் குணாநிதி. வாழ்த்துகள்.

வாகை சந்திரசேகர் அனுபவ நடிப்பை வழங்கியிருக்கிறார். தங்கதுரை, சாம் பால் படத்திற்கு கைகொடுத்துள்ளனர்.

விஷ்ணு ரங்கசாமியின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. ஜி வி பிரகாஷின் பின்னணி இசை படத்திற்கு மேலும் ஒரு வலு தான். பாடல்கள் மனதில் நிற்கவில்லை.

தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா முழுவதும் இன்ஞினியரீங் மற்றும் மருத்து கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்க பெற்றோர்கள் புரோக்கர்கள் மூலம் செல்லும் போது அது எங்கெல்லாம் செல்கிறது, என்னவெல்லாம் செய்கிறது என்பதை வெட்ட வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது இப்படம். இக்கதையை துணிந்து எடுத்து இயக்கியதற்காகவே இயக்குனருக்கு பெரும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்ளலாம்.


பல கோடி அளவிற்கு கல்விக்கு சம்மந்தமே இல்லாதவர்கள் கைப்பற்றி செல்வது, இதற்கு பின்னால் நடக்கும் ஒரு அரசியல் என பல விஷயங்களை இயக்குனர் காட்டியிருக்கிறார்.

இப்படம் பார்த்த பிறகு, கல்லூரியில் புரோக்கர் மூலமாக தங்களது குழந்தைகளை கல்லூரிகளில் சேக்கும் பெற்றோர்களுக்கு ஒரு விதமான அச்சத்தை நிச்சயம் கொடுக்கும்.

தயாரிப்பாளர் சபரிஷுக்கு வாழ்த்துகள்.

Facebook Comments

Related Articles

Back to top button