Spotlightசினிமா

சூர்யாவை இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ்!

மாநகரம், கைதி, மாஸ்டர் என்று மூன்று வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது உலக நாயகன் கமல் நடிக்கும் விக்ரம் படத்தை இயக்கி வருகிறார்.

படத்தின் படப்பிடிப்பு அதிவேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் பஹத் பாசில், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ் சினிமாவின் முதன்மை இயக்குனர்களான ஷங்கர், மணி ரத்னம் ம் வெற்றிமாறன் உட்பட பத்து இயக்குனர்கள் இணைந்து ”Rain On Films” என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளனர்.

இந்த தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கிறார். இப்படத்தில் ஹீரோவாக சூர்யா நடிக்கவிருக்கிறார் என்ற செய்தியும் வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் சூர்யாவோடு இணைவதால் படத்தின் எதிர்பார்ப்பு சூர்யா ரசிகர்களிடையே எகிற வைத்திருக்கிறது.

Facebook Comments

Related Articles

Back to top button