Spotlightதமிழ்நாடு

பாமக மாநில துணை தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் நடிகர் ரஞ்சித் !

 

பாட்டாளி மக்கள் கட்சி அதிமுக உடன் கூட்டணி வைத்துக் கொண்டதால் தனது மாநில துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் நடிகர் ரஞ்சித்.

இது குறித்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர், ‘பாமக இணைத்து கொண்டதில் வேதனை அடைகிறேன் மதுக்கடைக்கு எதிராக போராடியர்கள் எப்படி மதுக்கடை நடத்துபவர்களிடம் கூட்டணி வைத்துள்ளனர்.

4பேருக்கு கூஜா தூக்கிக்கொண்டு என்னால் வாழ முடியாது.அனைத்து அமைச்சர்கள் மீதும் ஊழல் புகார் கூறிவிட்டு எப்படி கூட்டணி வைக்க முடியும்.பாமக, அதிமுக கூட்டணியை மக்கள் விரும்பவில்லை.

பதவிக்காக , பணத்திற்காக இந்த கூட்டணி வைத்துள்ளனர் என்று நடிகர் ரஞ்சித் அதிரடியை காட்டியுள்ளார்.

Facebook Comments

Related Articles

Back to top button