
விஜய் நடிக்க அட்லீ இயக்க உருவாகி வருகிறது “தளபதி 63”. இப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் அதிவேகமாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தினை ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார்.
ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படத்திற்காக வியாபாரங்கள் தற்போதே தொடங்கி விட்டன.
விஸ்வாசம் படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்து பல கோடி லாபம் பார்த்த KJR ஸ்டுடீயோஸ் நிறுவனம் தளபதி 63 படத்தின் ரிலீஸ் உரிமையை வாங்க பேரம் பேசி வருகிறார்களாம்.
இதனால் தளபதி 63 படத்தின் ரிலீஸ் உரிமையும் KJR ஸ்டூடியோஸ் நிறுவனத்திற்கு செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Facebook Comments




