
டைம் ட்ராவலை மையப்படுத்தி தமிழ் சினிமாவில் வந்திருக்கு அடுத்த ஒரு படம் தான் இந்த ‘டிக்கிலோனா’ .
2020 முதல் 2027 வரையில் உள்ள கால கட்டத்தில் நகரும் டைம் ட்ராவல் படம்…
2027 ல் ஆரம்பிக்கிறது படம்.. EB துறையில் பணிபுரியும் சந்தானத்திற்கு அனேகா மனைவியாக இருக்கிறார்.
கணவனிடம் எப்போதும் முரண்டு பிடித்து சண்டை நடத்திக் கொண்டே இருக்கிறார் அனேகா.. 2020ல் இருந்து 27 வரை இந்த சண்டை ஓயாது நடந்து கொண்டே இருக்கிறது.
என்னடா வாழ்க்கை இது என யோசிக்கும் வேளையில் யோகிபாபுவை சந்திக்கிறார்.அவரின் உதவியோடு டைம் ட்ராவல் செய்து 2020க்கு செல்கிறார் சந்தானம்.
எப்படியாவது திருமணத்தை நிறுத்தி விட்டால் வாழ்க்கையில் சந்தோஷமாக நிம்மதியாக இருக்கலாம் என்றெண்ணி திருமணத்தை நிறுத்த 2020 திருமண நாளுக்கு செல்கிறார் சந்தானம்
அதன்படி 2020க்கு செல்ல அங்கு ஏற்கெனவே உள்ள சந்தானம் திருமணம் நடக்க வேண்டும் என்கிறார். இதனால் இருவருக்கும் மோதல் முற்றுகிறது.
இறுதியாக தனது திருமணத்தை சந்தானம் தடுத்து நிறுத்தினாரா,..?? இல்லையா..?? 2027 க்கு திரும்பி வந்தாரா இல்லையா என்பது படத்தின் மீதிக் கதை…
சந்தானத்தின் வழக்கமான டைமிங் காமெடி படத்தில் நன்றாகவே வேலை செய்துள்ளது. ஒரு சில இடங்களில் வரும் மொக்கை ஜோக்குகளை ஜீரணிக்க முடியாமல் எல்லாம் எங்க நேரம்பா என கேட்க வைத்து விடுகிறார்.
கதாநாயகிகளாக நடித்திருக்கும் அனகா, மற்றும் ஷெரீன் காஞ்வாலா இருவரும் படத்தின் கதாபாத்திரத்திற்கு தேவையானவர்கள் தான்.. அழகு தேவதைகளாக இருக்கிறார்கள். நடிப்பில் சூப்பர்.
யோகிபாபு, ஆனந்தராஜ், முனீஷ்காந்த் என படத்தில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்த அனைவரும் படத்திற்கு பலமாக வந்து செல்கிறார்கள்.
டைம் ட்ராவல் படத்தை இவ்வளவு காமெடியாக கொடுத்த இயக்குனருக்கு பெரிய பாராட்டுகளை தெரிவிக்கலாம்.
யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் ஓகே ரகம். குறிப்பாக கமல் பட ரீமேக் பாடல் ரசிகர்களை ஆட்டம் போட வைக்கிறது. பின்னனி இசை சூப்பர்.
அர்வியின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம்.
டிக்கிலோனா… – ஜாலியா ஒரு ட்ரிப் போய்ட்டு வரலாம்





