Spotlightவிமர்சனங்கள்

நான் சிரித்தால் – விமர்சனம் 3.25/5

றிமுக இயக்குனர் ராணாவின் இயக்கத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதியின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் ‘நான் சிரித்தால்’.

இஞ்சினியரீங் படித்து நல்லதொரு வேலை, வேலை செய்யும் இடத்தில் காதல் என நன்றாக சென்று கொண்டிருந்த ஆதியின் வாழ்க்கையில் வந்தது ஒரு பூகம்பம்.

திடீரென ஒருநாள், கவலையில் இருக்கும் ஆதிக்கு சிரிப்பு வருகிறது. அதன் பிறகு வலியோ, துன்பமோ எதுவாகினும் அவரை அடக்க முடியாமல் அவருக்கு சிரிப்பு வந்துவிடுகிறது.

இந்த கட்டுக்கடங்காத சிரிப்பால், ரவுடி கே எஸ் ரவிக்குமாரின் பகையை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது ஆதிக்கு….

அதன் பிறகு ஆதியின் வாழ்க்கை என்ன ஆனது என்பதே படத்தின் மீதிக் கதை..


எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்கும்படியான கதாபாத்திரம் என்பதால், படம் முழுவதும் சிரித்துக் கொண்டே கலகலப்பூட்டுகிறார் ஆதி.

ஆங்காங்கே இளைஞர்களுக்கான அறிவுரை, சமுதாயத்தின் மேல் கேள்விக்கனைகள் என எதையும் விட்டு வைக்காமல் அனைத்தையும் சீராக நிவர்த்தி செய்திருக்கிறார் ஆதி.

நாயகி ஐஸ்வர்யா மேனன் அழகாக வந்து நிற்கிறார். காதல் காட்சிகளாக இருக்கட்டும், ப்ரேக் அப் பாடல் காட்சிகளிலும் இளைஞர்களின் மனதை கொள்ளை கொள்கிறார்.

80’ஸ் கிட்ஸ்க்கான உடல் பாவனையோடு கே எஸ் ரவிக்குமார், காமெடி கலந்த ரவுடித்தனத்தில் மிரட்டுகிறார். ரவி மரியா, சாரா, முனிஷ்காந்த், என நடிகர்கள் அனைவரும் தங்களது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்து முடித்திருக்கிறார்கள்.

படம் முழுவதும் காமெடிக்கான இடங்கள் அதிகமாக இருந்தும் அதை இயக்குனர் சற்று பயன்படுத்தாமல் விட்டுவிட்டது படத்திற்கு சற்று சறுக்கலாக இருந்துள்ளது.

கல்லூரி மாணவர்கள் குறிப்பாக இஞ்சினியரீங் கல்லூரி மாணவர்கள் எளிதில் கதைக்குள் சென்றுவிடும்படியான காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதால், கதை விறுவிறுப்பாகவும் கலகலப்பாகவும் நகர்கிறது.

திரையரங்கில், தல, தளபதி பட காட்சியில் காமெடி நடிகர் கதிருடன் ஆதி அடிக்கும் லூட்டிகள் திரையரங்கில் சிரிப்பு சத்தம் விண்ணை பிளக்கிறது.

யோகிபாபு க்ளைமாக்ஸ் காட்சிக்கு மட்டும் வந்தாலும், அவரை இன்னும் நன்றாக பயன்படுத்தியிருக்கலாம்.

லாஜிக் இல்லை ஆனா மேஜிக் இருக்கு..

கதை நகர்வை திறம்பட கையாண்டு இருக்கிறார் அறிமுக இயக்குனர் ராணா.

ஆதியின் இசையில் ப்ரேக் அப் , மற்றும் பர்த் டே பாடல் ஆட்டம் போட வைக்கிறது. பின்னனி இசையிலும் மிரட்டல் தான்.

வாஞ்சிநாதன் முருகேசனின் ஒளிப்பதிவு அழகு.

நான் சிரித்தால் – சிரிக்கலாம்…

Facebook Comments

Related Articles

Back to top button