
அஜித் நடிக்க ஹச் வினோத் இயக்க உருவாகி வருகிறது ‘வலிமை’. இப்படத்தினை போனி கபூர் தயாரித்து வருகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
இப்படத்தில், மிடுக்கான போலீஸ் அதிகாரி பாத்திரத்தில் அஜித் நடிப்பது பலரும் அறிந்ததுதான். ஆனாலும், படத்தில் அண்ணன், தங்கை, அம்மா, மகன் என சென்டிமென்ட் விஷயங்கள்தான் அருமையாக வந்திருக்கிறதாம்.
யுவன் ஷங்கர் ராஜா இசையில் நான்கு பாடல்கள் உருவாக்கப்பட்டுள்ளது. அதில், மூன்று பாடல்கள் மெலடி.
மிரளவைக்கும் பைக் சேஸிங் காட்சிகள்தான் ஹைலைட்டாக இப்படத்தில் உள்ளதாம். அதைவைத்து ட்ரெய்லர் உருவாக்கப்பட, ‘இந்த சஸ்பென்ஸை உடைக்க வேண்டாம்’ அதை ட்ரெய்லரிலிருந்து தூக்கி விடுங்கள்” என்று சொல்லிவிட்டாராம் அஜித். வேறு ட்ரெய்லர், டீஸரை தயார் செய்துவருகிறார்களாம் படக்குழுவினர்.
படத்தில் முதல் பாதில் 5 சண்டைக் காட்சிகளும் இரண்டாம் பாதியில் மூன்று சண்டைக் காட்சிகளும் இடம்பெறுகிறதாம். இதனால் ரசிகர்களுக்கு தரமான ஆக்ஷன் விருந்து காத்திருக்கிறது என்று பேசப்படுகிறது கோலிவுட்டில்.





