
இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் மிஸ்டர் லோக்கல் திரைப்படம் விரைவில் விரைவில் திரைக்கு வருகிறது.
இதனைத்தொடர்ந்து, சிவகார்த்திகேயன் இன்று நேற்று நாளை இயக்குநர் ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். மேலும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டியராஜ் இயக்கும் படத்திலும், இரும்புத்திரை இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்நிலையில், லைகா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக ஒப்பந்தமாகி உள்ளார். இதுதொடர்பான அறிவிப்பினை லைகா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக தெரிவித்துள்ளது.
மேலும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
விக்னேஷ் சிவன் இயக்குவதால், மீண்டும் நயன்தாராவுடன் சிவகார்த்திகேயன் நடிக்கவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ஜூலை 2019-ல் படப்பிடிப்பு துவங்கப்பட்டு 2020-ல் வெளியாகும் என லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.
நானும் ரெளடி தான் படத்தின் வெற்றிக்குப் பிறகு சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தினை இயக்கினார் விக்னேஷ் சிவன். இப்படம் சரிவர ஓடாததால், சிவகார்த்திகேயனின் இப்படத்தை வெற்றிப்படமாக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டிருக்கிறார் விக்னேஷ் சிவன்.
இக்கூட்டணியை விக்னேஷ் சிவனுக்காக உருவாக்கியது நயன்தாராதான் என்கின்றனர் பலர்.




