Spotlightசினிமாதமிழ்நாடு

தமிழக அரசை விமர்சித்த ’பவன் கல்யாண்’!

தமிழக அரசு சுயமரியாதையை இழந்து மத்திய அரசிடம் சரணடைந்துள்ளதாக தெலுங்கு நடிகரும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் கூறினார்.

சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த இவர், ‘வட நாட்டு தலைவர்களின் மற்றும் கட்சிகளின் ஆதிக்கத்தால், தென்னிந்திய மக்கள் தொடர்ந்து இரண்டாம்பட்ச குடிமக்களாக பார்க்கப்படுகிறார்கள்.

திராவிட நாடு கோரிக்கை இப்போது இல்லை. ஆனால், திராவிட கலாச்சாரம், மொழிகள் காப்பாற்றப்பட வேண்டும். அவைகள் தங்கள் தனித்தன்மையை இழந்துவிடக் கூடாது.

இதற்கு இந்திய ஆட்சி அதிகாரத்தில் தென்னிந்தியர்களின் பங்கு கணிசமாக இருக்க வேண்டும். ஜனநாயக நாட்டில் யாரும் கட்சி தொடங்கலாம்” என்றும், “கமல் கட்சி தொடங்கி இருப்பதையும், ரஜினி தொடங்க இருப்பதையும் வரவேற்கிறேன்.

அவர்கள் என்னோடு இணைந்து பணியாற்ற விரும்பினால், அதற்கான தேவை ஏற்பட்டால் இணைந்து பணியாற்றுவேன்” என்று தெரிவித்துள்ளார்

Facebook Comments

Related Articles

Back to top button