Spotlightவிமர்சனங்கள்

காற்றின் மொழி விமர்சனம் – 3.5/5

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக வலம் வந்த ஜோதிகா, திருமணத்திற்கு பிறகு குடும்பம் வீடு என ஒதுங்கியிருந்தார். தற்போது மீண்டும் சினிமா பக்கம் திரும்பி, நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் மட்டும் தற்போது கவனம் செலுத்தி, அதில் நடித்தும் வருகிறார்.

பாலிவுட்டில் வித்யா பாலன் நடித்து ஹிட்டான துமாரி சுலு படத்தின் ரீமேக்கான ”காற்றின் மொழி” படத்தில் நடித்துள்ளார். இப்படத்தினை இயக்கியுள்ளார் ராதா மோகன். இப்படத்தின் விமர்சனத்தை காணலாம்.

12 வயது பையனுக்கு அம்மாவாகவும் விதார்த்தின் மனைவியாகவும் அன்றாட வேலை செய்யும் பெண்ணாக வருகிறார் நம்ம ஜோதிகா.

இயந்திரமாக சுற்றி சுற்றி வரும் ஜோதிகா, ஒரு கட்டத்திற்கு பிறகு தனக்கு பிடித்த வேலையான ரேடியோ ஜாக்கியாக ஆக வேண்டும் என்று முடிவெடுக்கிறார் ஜோதிகா.

ஒரு தனியார் ரேடியோவில் இரவு நேரத்தில் வரும் ஒரு ‘ஷோ’வை நடத்தும் ரேடியோ ஜாக்கியாக வேலைக்கு சேர்கிறார். குரலை ஒரு ஈர்ப்பாக மாற்றும் ஜோதிகா,ஆபாச வார்த்தைகள் கலந்து வரும் போன் கால்களை ஜோதிகா தனக்கே உரித்தான குரலை வைத்து பதிலளிக்கிறார்.

அதன் பிறகு ஜோதிகாவின் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளே இப்படத்தின் மீதிக் கதை.

ஜோதிகா நடிப்பை இனியும் பாராட்டி தான் எழுத வேண்டும் என்றில்லை. தான் ஒரு அனுபவ நடிகை என்பதை ஒவ்வொரு காட்சியிலும் நிரூபித்திருக்கிறார். ‘ஹலோ’ என்று பேசுவதில் ஆரம்பித்து தனது கணவனுக்கு நல்ல மனைவியாகவும், 12 வயது பையனுக்கு நல்ல அம்மாவாகவும் இருப்பது வரையிலும் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி அனைத்து ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறார்.

நல்ல ஒரு கதையை தேர்ந்தெடுத்து நடித்து வரும் விதார்த்துக்கு, இதுவும் ஒரு மைல்கல் படமாக தான் இருக்கும். ஆபிசில் முதலாளிக்கு கீழ் வேலை பார்ப்பதில் ஏற்படும் கசப்பான அனுபவங்கள், தனது மனைவியிடம் ரேடியோவில் இப்படியெல்லாம் பேசுகிறார்களே என்று குமுறும் விதார்த்தின் நடிப்பு .. அருமை..

சிரிப்புக்கு மனோபாலா, சீரியஸ்க்கு எம் எஸ் பாஸ்கர் என படத்தில் நடித்த அனைவரும் கதையின் உயிரோட்டம் தான்.

ஒரு காட்சிக்கு மட்டும் வந்து சென்றாலும், தனது மாஸ் நடிப்பை அமைதியாக கொட்டிச் சென்றுவிட்டார் சிம்பு….

ஏ எச் காசிப்-பின் பின்னனி இசை படத்திற்கு உயிர் கொடுத்துள்ளது. பாடல்கள் ஒரு முறை கேட்கும் ரகம்தான்.

மகேஷ் முத்துசுவாமியின் ஒளிப்பதிவு பளிச்..

எந்த ஒரு ஆக்‌ஷன் காட்சிகளும் இல்லாமல் எமோஷன்., காதல்., செண்டிமெண்ட் என ஒரு குடும்பபாங்கான காவியத்தை கொடுத்த ராதாமோகனுக்கு வாழ்த்துக்கள்../

காற்றின் மொழி – புயலாக இல்லாமல் தென்றலாக தீண்டுவாள்…

Facebook Comments

Related Articles

Back to top button