
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் புதிய படம் ஒன்று உருவாக இருக்கிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். அனிருத் இசையமைக்கவிருக்கிறார்க். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து தற்போது நடிகை மேகா ஆகாஷ் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை மேகா ஆகாஷ் நடிப்பில் தெலுங்கில் லீ என்ற படம் கடந்த ஆண்டில் வெளியானது. ஆனால் தமிழில் இவரது நடிப்பில் ஒரு படங்கள் கூட வெளியாகவில்லை. ஆனால் இவருக்கு தமிழில் ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இவர் தற்போது ஒரு பக்க கதை, தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள எனை நோக்கி பாயும் தோட்டா, பூமராங் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் நடிப்பில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரனும், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மேகா ஆகாஷும் நடிக்க உள்ளனர். இது குறித்த அறிவிப்பை விரைவில் படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்க படுகிறது. இந்த படம் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாங்கவுள்ள 165வது படமாகும். காலாவுக்கு பிறகு ரஜினி நடிப்பில் உருவாகும் இந்த படம் அரசியல் கதையாக உருவாக உள்ளதாம்.