
நாளுக்கு நாள் சமூக வலைதளங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் வரிசையில் தற்போது ”HOOTE” என்ற சமூக வலைதளமும் இணைந்துள்ளது.
இந்த சமூக வலைதளத்தில் வாய்ஸ் மூலம் செய்தியை பகிரக்கூடிய வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வலைதளத்தை ரஜினிகாந்தின் இளைய மகள் செளந்தர்யா மற்றும் போக்கலா என்பவருடன் இணைந்து இதை தொடங்கியுள்ளார் தொடங்கியுள்ளார்.
இதன் அறிமுக விழா சென்னையில் மிக எளிமையான முறையில் மிகவும் பிரம்மாண்டமான ஹோட்டலில் சில பத்திரிகையாளர்களை அழைத்து நடத்தப்பட்டது.
இவ்விழாவில் பேசிய செளந்தர்யா ரஜினிகாந்த், “ எனது தந்தைக்கு தமிழ் பேச தெரியுமே தவிர, எழுதத் தெரியாது . “ என்று கூறினார்.
இந்த பேச்சு தற்போது பெரும் வைரலாகி வருகிறது. கிட்டத்தட்ட சுமார் 40 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் ரஜினிக்கு தமிழ் எழுத தெரியாதா.? என்ற கேள்வி அனைவரிடத்திலும் பெரும் ஆச்சரியத்தை கிளப்பியுள்ளது.
அதுமட்டுமல்லாமல், தான் தமிழகத்தை ஆள வரப் போவதாக கூறி பின் அரசியலில் இருந்து வெளியே சென்றதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். அரசியலில் இறங்கிய அச்சமயத்தில் ”தான் ஒரு பச்சைத் தமிழன்” என்று மார்தட்டி கூறினார் ரஜினிகாந்த்..
என்னப்பா இது “ஒரு பச்சைத் தமிழனுக்கு தமிழ் எழுத தெரியாதா.?” என்று சமூக வலைதளங்களில் பலரும் கேலியும் கிண்டலுமாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.
”தான் இப்படி பேசுவதால் ரசிகர்கள் அப்பா மேல் வைத்திருக்கும் காதல் போய்விட போகுதா.?” என்றும் கூறினார் செளந்தர்யா.





