Spotlightசினிமா

20, 16 வயது பையன்களின் அப்பாவாக அசுரன் ‘தனுஷ்’!

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ளது ‘அசுரன்’. தமிழ் சினிமா மட்டுமல்லாது உலகமே இப்படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறது.

இப்படம் சுமார் 1000 திரையரங்குகளில் உலகம் முழுவதும் நாளை பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது.

இப்படத்தினை கலைப்புலி எஸ் தாணு தயாரித்திருக்கிறார். இப்படத்தில் 16 மற்றும் 20 வயது பையன்களின் அப்பாவாக தனுஷ் நடித்திருக்கிறாராம். சுமார் 48 வயதுடைய கேரக்டரில் அந்த கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறாராம் தனுஷ்.

இப்படத்திற்காக தனுஷிற்கு பல விருதுகள் கிடைக்கும் என்கிறது கோலிவுட் வட்டாரம். தனுஷிற்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்திருக்கிறார்.

Facebook Comments

Related Articles

Back to top button