Spotlightசினிமா

’கசட தபற’ படத்திற்காக நட்சத்திர பட்டாளத்தை ஒன்றுதிரட்டிய சிம்புதேவன்!

யக்குனர் சிம்புதேவனின் மல்ட்டி ஸ்டாரர் படமான ”கசட தபற”, சமூக வலைத்தள பக்கங்கள், இணையதள பக்கங்கள் மத்தியில் நல்ல ஒரு எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.

இது குறித்து இயக்குனர் சிம்பு தேவன் கூறும்போது, “திறமைமிக்க நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோருடன் வேலை செய்தது எனக்கு ஒரு வித்தியாசமான மற்றும் தனிப்பட்ட அனுபவமாக இருந்தது. இது சம்பிரதாய அறிக்கையாக கூட தோன்றலாம், ஆனால் இதில் உள்ள நட்சத்திர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை பார்க்கும்போது, அது நிரூபணம் ஆகிறது. ஹரீஷ் கல்யாண், சந்தீப் கிஷன், சாந்தனு பாக்யராஜ், வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன், விஜயலட்சுமி மற்றும் பிரியா பவானி சங்கர் என ஒவ்வொருவருமே நடிப்பில் தனித்துவமான ஸ்டைலை கொண்டிருப்பவர்கள்.

கூடுதலாக, இவர்கள் யாருமே அவசர அவசரமாக எந்த படங்களையும் ஒப்புக் கொள்வதில்லை, நல்ல கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்க கடுமையான முயற்சிதை மேற்கொள்பவர்கள். தொழில்நுட்ப குழுவை பற்றி சொல்வதென்றால், தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கும் பிரபலமான அனைத்து கலைஞர்களும் பங்கு பெற்று இருக்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன் போன்ற கொண்டாடப்படும் இசையமைப்பாளர்களுடன் ஜிப்ரான் மற்றும் சாம் சிஎஸ் போன்ற தற்போதைய பரபரப்பான இசையமைப்பாளர்களும் இந்த படத்தில் பணிபுரிகிறார்கள். கசட தபற குழுவுக்கு இது ஒரு மிகப்பெரிய வரம்.

இந்த கதையையும், முயற்சியையும் நம்பி அதை செயல்படுத்துவதற்கு உதவியாக இருந்த தயாரிப்பாளர்கள் வி. ராஜலட்சுமி மற்றும் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ஆர் ரவிந்திரன் ஆகியோருக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இப்போது ஃபர்ஸ்ட்லுக் மற்றும் மோஷன் போஸ்டருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது எங்களின் நம்பிக்கையை மேலும் அதிகமாக்கியிருக்கிறது. விரைவில் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகும், தொடர்ந்து ஜுலையில் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்.

‘ஆந்தாலஜி’ என்று அழைக்கப்படும் குறிப்பிட்ட வகை படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு எப்பொழுதுமே மிகச்சிறப்பானது. சிம்புதேவன் எவ்வாறு இதைப் பார்க்கிறார்? எனக் கேட்டால் அவர் உடனடியாக விளக்குகிறார், “எங்கள் திரைப்படமானது இந்த வகையைச் சார்ந்ததாக இருக்காது என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஆந்தாலஜி என்பது ஒரு கதைக்கும் மற்றொன்றுக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லாத சில சிறுகதைகளின் தொகுப்பு. ஆனால் கசட தபற ஒரு கதை, ஆறு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கும் ஒரு படம்” என்றார்.

கசட தபற படத்தை பிளாக் டிக்கட் கம்பெனி சார்பில் வி. ராஜலட்சுமி, ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரனுடன் இணைந்து தயாரித்திருக்கிறார். இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன், ஜிப்ரான், சாம் சிஎஸ், பிரேம்ஜி மற்றும் ஷான் ரோல்டன் ஆகியோர் இசையமைத்திருக்கிறார்கள்.

எம்.எஸ்.பிரபு, சக்தி சரவணன், எஸ்.டி.விஜய் மில்டன், பாலசுப்ரமணியம், ஆர்.டி ராஜசேகர் மற்றும் எஸ்.ஆர்.கதிர் ஆகியோர் ஒளிப்பதிவை கையாண்டிருக்கிறார்கள். காசி விஸ்வநாதன், ராஜா முஹமது, ஆண்டனி, பிரவீன் KL, விவேக் ஹர்ஷன் மற்றும் ரூபன் ஆகியோர் படத்தொகுப்பு செய்திருக்கிறார்கள். ஜெயக்குமார் கலை இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
error: Content is protected !!
Close
Close