
பிரபல இயக்குனர் பிஜோய் நம்பியார் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ், காளிதாஸ் ஜெயராம், டிஜே பானு, சஞ்சனா நடராஜன், அம்ருதா ஸ்ரீநிவாசன், மெர்வின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் போர்
ஒளிப்பதிவு: Jimshi Khalid & Presley Oscar D’souza
இசை: Sanjith Hegde ,Dhruv Visvanath, Gaurav Godkhindi
பின்னணி இசை: Harish Venkat & Sachidanand Sankaranarayanan, Gaurav Godkhindi
தயாரிப்பு: T series, Getaway pictures, Roox media
தயாரிப்பாளர்கள்: T-Series, Bejoy Nambiar, Prabhu Antony, Madhu Alexander
மருத்துவக் கல்லூரி தான் படத்தின் கதைக்களம்.. பாண்டிச்சேரியில் இப்படத்தின் கதை நகர்கிறது.. இறுதி ஆண்டு படிக்கும் கல்லூரி மாணவராக வருகிறார் அர்ஜுன் தாஸ்.
கதைக்களம் பாண்டிச்சேரி என்பதாலோ என்னவோ படம் முழுக்க மது சற்று அதிகமாகவே காணப்படுகிறது. அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவராக வந்து சேர்கிறார் காளிதாஸ் ஜெயராம்.
இவருக்கும் அர்ஜுன் தாசுக்கும் சிறுவயதில் ஏற்பட்ட சில மோதலால் அர்ஜுன் தாஸை பழிவாங்க நினைக்கிறார் காளிதாஸ். எப்போது சிக்குவார் என்று காத்துக் கொண்டிருக்கிறார் காளிதாஸ்.
படத்தில் ஹீரோயின்களாக தோன்றியுள்ளனர் பானு மற்றும் சஞ்சனா.
கல்லூரியில் அநீதிக்காக எதிர்த்து போராடும் கம்யூனிஸ்ட் போராளியாக வருகிறார் பானு. கலகலப்பாகவும் நட்புகளை பெரிதாகவும் என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் சஞ்சனா.
தொடர்ந்து கல்லூரி தேர்தல் தேர்தலில் அரசியல் என கதை நகர அடுத்து என்ன நடந்தது என்பதே படத்தின் மீதி கதை….

தனது தனித்துவமான குரலாலும் உடல் மொழியாலும் தனித்து தெரிகிறார் நடிகர் அர்ஜூன் தாஸ். இவரும் காளிதாஸும் போட்டி போட்டுக் கொண்டு நடித்து காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ளனர்.
திரைக்கதை வேகமாக நகர்வதால், ஆங்காங்கே எட்டிப் பார்த்த லாஜிக் ஓட்டைகள் பெரிதாக தெரியவில்லை… கதையில் சற்று சுவாரஸ்யத்தை ஏற்றியிருந்திருக்கலாம்…
படம் முழுவதும் கஞ்சா, புகை, மது என அனைத்தும் சூழ்ந்து புகை மண்டலமாக இருப்பது இளைஞர்களுக்கு என்ன சொல்ல வருகிறார்கள் என கேள்வி எழுகிறது .?
பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு படத்திற்கு பெரும் தூணாக வந்து நிற்கிறது.
பின்னணி இசையில் தனித்துவமாக தெரிந்திருக்கிறார்கள்.
நாயகி சஞ்சனா நடராஜன், அனைத்து நடிகர்களையும் தூக்கி சாப்பிடுவது போல் நடிப்பில் அசர வைத்திருக்கிறார்.
மற்ற கதாபாத்திரங்களில் நடித்த நடிகர்கள் அவர்களுக்கு என்ன கொடுக்கப்பட்டதோ அதை தெளிவாக செய்து முடித்திருக்கிறார்கள். கதையில் இன்னும் சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருந்திருக்கலாம்.
போர் – யூத்களுக்கு சம்பர்ப்பணம்..




