Spotlightசினிமாவிமர்சனங்கள்

தலைக்கூத்தல் – விமர்சனம் 3.5/5

லென்ஸ் படத்தினை இயக்கிய ஜே பி என்ற ஜெயப்பிரகாஷ் இயக்கத்தில் சமுத்திரக்கனி, கதிர், வசுந்தரா நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் தலைக்கூத்தல். படத்தின் தலைப்பே அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவர்ந்திழுத்ததால் பெரும் எதிர்பார்ப்பை இப்படம் ஏற்படுத்தியிருந்தது. எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.

கதைப்படி,

சமுத்திரக்கனியின் மனைவியாக வருகிறார் வசுந்தரா. இவர்களுக்கு ஒரு மகள். சமுத்திரக்கனியின் தந்தை ஒரு விபத்தில் சிக்கி படுத்த படுக்கையாகி விடுகிறார்.

இரவில் செக்யூரிட்டி வேலைக்குச் சென்று பகலில் தனது தந்தையின் பணிவிடைகளை செய்து வருகிறார் சமுத்திரக்க்னி. பகலில் வசுந்தரா தீப்பெட்டி வேலைக்குச் செல்கிறார்.

இது பிடிக்காத வசுந்தராவின் தந்தை, சமுத்திரக்கனியிடம் உங்கள் அப்பாவை கருணை கொலை செய்துவிடலாம் என்று கூறிவிடுகிறார். இதனை ஏற்க மறுத்துவிடுகிறார் சமுத்திரக்கனி.

அதன்பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.

தனது யதார்த்த நடிப்பால் அனைவரையும் கவர்ந்திழுத்திருக்கிறார் நாயகன் சமுத்திரக்கனி. தனது தந்தை மீது பாசம் காட்டும் இடத்திலும் சரி, தனது தந்தைக்கு பணிவிடைகள் செய்யும் இடத்திலும் சரி படம் பார்ப்பவர்களின் கண்களில் ஈரம் எட்டிப் பார்க்க வைத்துவிடுகிறார்.

வசுந்தராவும் தனது யதார்த்த நடிப்பிற்கு தீணி கொடுத்து அசத்தியிருக்கிறார். நடுவில் கதிரின் காதல் கதையும் ரசிக்கும்படியாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் ஜெ பி. கதிரின் கதாபாத்திரம் கூர்நோக்க வைத்திருப்பது ப்ளஸ்.

தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இன்னமும் தலைக்கூத்தல் முறை இருப்பதை இயக்குனர் சுட்டி காட்டியிருக்கிறார். ஒரு வாழ்வியலை கண்முன்னே காண்பித்து நம்மை ரசிக்க வைத்ததில் இயக்குனர் வெற்றி பெற்றிருக்கிறார்.

படத்தின் பின்னணி இசை படத்திற்கு பெரும் பலமாக அமைந்திருக்கிறது. ஒளிப்பதிவும் நச்.

தரமான படத்தினை தயாரித்து வரும் YNOT தயாரிப்பாளர் சசிகாந்த் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.

தலைக்கூத்தல் – விழிப்புணர்வான ஒரு வாழ்வியல்..

Facebook Comments

Related Articles

Back to top button