Spotlightசினிமா

சினிமா பிரபலங்களால் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது ‘உற்றான்’ இசை!

ற்றார் உறவுகளை எல்லாம் திரை அரங்குகளுக்குள் அழைக்கும் வகையில் தயாராகி இருக்கும் படம் உற்றான். ஓ. ராஜா கஜினி எழுதி இயக்கி இருக்கும் இப்படத்தை Sai cinemas தயாரித்துள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு 23.9.19 அன்று விழா மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது,

இந்த விழாவில் கலைப்புலி s தாணு , பாக்யராஜ் , R .K செல்வமணி , ரமேஷ் கண்ணா , R வ உதயகுமார் , K .ராஜன் , ஒளிப்பதிவாளர் சுகுமார் , நடிகர் ஆரி, நடிகர் ராஜேஷ் , E .ராமதாஸ் , சித்ரா லக்ஷ்மணன் , ,இயக்குனர் பேரரசு , கலைப்புலி சேகரன் , நடிகர் ஜெய்வந் , கவிஞர் , பிறை சூடன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர் .

விழாவில் உற்றான் பட இயக்குனர் ஓ .ராஜா கஜினி பேசியவை : ‘உற்றான் படத்தில் நடித்த ரோஷனும் , ஹிரோஷினி அற்புதமாக நடித்துள்ளனர் ..சிறப்பான பாடல்களை தந்த ரகுநந்தன் விழா நாயகனுக்கு நன்றி. 18 படங்களில் வேலை செய்து வந்தேன் .எனக்காக யாரும் முன்வரவில்லை ..அதனால் நானே தயாரிப்பில் இறங்கி இப்படத்தை தயாரித்தேன் ..கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் இந்த படம் பிடிக்கும். நாம் ரசிக்கும் அனைத்து விஷயங்களும் இப்படத்தில் உள்ளன ‘இவ்வாறு பேசினார் .

விழாவில் கலந்துகொண்டு ஆர்.வி உதயகுமார் பேசியதாவது,

“இந்த இசை வெளியீட்டு விழா என் குடும்பவிழா. என் வாழ்க்கை கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து தான் ஆரம்பித்தது. என் அன்புச் சகோதரரின் பேரன் தான் இப்படத்தின் ஹீரோ ரோஷன். இந்த ஹீரோவுக்கு முதலில் அவரது பெற்றோர் வைத்த பெயர் உதயகுமார். அந்தவகையில் இப்படத்தின் ஹீரோ நான் தான். இப்படத்தின் டைட்டிலே எனக்கு மிகவும் பிடித்தது. தமிழை காப்பாற்ற போறேன் என்று சொல்பவர்களின் படங்களின் டைட்டில் கூட இவ்வளவு அழகாக இல்லை. உற்றான் என்ற டைட்டிலுக்காகவே இந்த பட டீமை கொண்டாட வேண்டும். இந்தப்படத்தின் டரைலரும் பாடல்களும் அருமை . இந்தப்படத்தில் ரோஷன் ரொம்ப அசால்டா நடிச்சிருக்கார். இந்த இயக்குநர் இந்தப்படத்தை பல கஷ்டங்களையும் துரோகங்களையும் கடந்து எடுத்திருக்கிறார். அந்த வலிகளுக்கு எல்லாம் மருந்தாக இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியடைய வேண்டும் ” இவ்வாறு பேசினார்

தயாரிப்பாளர் கே.ராஜன் பேசியதாவது,

“இந்த உற்றான் படம் வெளியானதும் வெற்றி பெற்றான் என்ற பெயரை வாங்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். இந்த ஹீரோவின் தந்தை சுபாஷ். அவன் தம்பி சுபாஷ். நான் படம் எடுக்கும் போது என்னால் முடிந்த சம்பளம் தான் கொடுப்பேன். இப்படம் கண்டிப்பாக வியாபாரம் ஆகிடும்” என்றார்

இயக்குநர் பேரரசு பேசியதாவது,

“உருப்படாதவங்க சினிமாவுக்கு வரலாம். ஆனால் சினிமாவுக்கு வந்து உருப்படாமல் போய்விடக்கூடாது. உற்றான் ட்ரைலரைப் பார்க்கும் போதே ரொம்ப சந்தோஷமா இருக்கு. கல்லூரி காதல் கதைகளைப் பார்த்தே அதிகநாள் ஆகிவிட்டது. இது அப்படியொரு படமாக இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப்படத்தில் ஹீரோவுக்கு பெயர் விஜய். ஆனால் பாட்டில் அல்டிமேட்னா தல அப்படின்னு ஒரு வரி வச்சிருக்கார். ஆக சரியா பேலன்ஸ் பண்ணி இருக்கிறார்.

அதனால் இயக்குநர் ராஜாகஜினி விவரமாகத் தான் இருக்கிறார். இந்த ஹீரோ ரோஷன் முழுக்க முழுக்க ஹீரோவுக்கு தகுதியானவர். இவரிடம் அல்லு அர்ஜுன் சாயல் இருக்கு. உற்றார் வேறு உறவினர் வேறு. உறவுகளுக்கு ஈக்குவலான ஆட்களை உற்றார் என்று சொல்வோம். மாமன் மச்சான் போன்றவர்கள் தான் உறவினர்கள். இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் அனைவருமே உற்றார்கள் தான். இவர்கள் அனைவரின் வாழ்த்தும் இந்தப்படக்குழுவிற்கு கிடைத்திருக்கிறது.” என்றார்,

பாக்யராஜ் பேசியவை :’வேறு யாருக்காகவும் இந்த விழாவுக்கு வரவிலில்லை …சுபாஷ் ஒருவருக்காக தான் வந்தேன் ..நான் ட்ரைலரையோ , பாடல்களையோ பார்க்கவில்லை .ஆனால் இவ்வளவு பேர் பாராட்டியதை பார்த்தேன் ..ரோஷனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ..படத்தின் இயக்குனர் ராஜா கஜினிக்கு பாராட்டுக்கள்’ இவ்வாறு அவர் பேசினார் .

கலைப்புலி S தாணு பேசியவை : இந்த உற்றான் திரைப்படம் மாபெரும் வெற்றியடையும் .காரணம் ரோஷனின் தந்தை சுப்பாஸ் அவர்களின் மனிதநேயம் தான் . சிறப்பாக நடித்து அனைவரின் பாராட்டுகளை பெரும் ரோஷனுக்கு எனது வாழ்த்துக்கள் . இவ்வாறு அவர் பேசினார் .

தனஞ்சயன் அவர்கள் பேசியவை : ‘படத்தின் தயாரிப்பாளர் , இயக்குனர் , ராஜா கஜினிக்கு என்னுடைய வாழ்த்துக்கள் .தனி மனிதனாய் படத்தை அறிமுக இயக்குனர் இயக்கி தயாரிப்பது சுலபம் அல்ல . நடிகர் ரோஷன் அவர்களுக்கு ஹீரோவாக இருக்க வேண்டிய பொருத்தம் நன்றாகவே இருக்கிறது .படக்குழுவினர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ‘இவ்வாறு பேசினார்

நடிகர் ஆரி பேசியவை : ‘ஒரு புதுமுக இயக்குனர் புதுமுக நடிகர்களை வைத்து படம் இயக்கி அதை ரிலீஸ் செய்வது சாதாரண விஷயம் இல்லை .இயக்குனர் ராஜா கஜினி அவர்களுக்கு அடுத்த படத்திற்கு நடிகர்கள் தேவைப்பட்டால் கால்சீட் கொடுக்க நான் தயார். ரோஷன் பத்திரிக்கை சொந்தங்களில் இருந்து வந்து இன்று ஹீரோவாக உருவெடுத்துள்ளார் . இசைமைப்பாளர் ரகுநந்தனின் பாடல்கள் அனைத்தும் அருமையாக உள்ளது .படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்’ இவ்வாறு அவர் பேசினார் .

நாயகன் ரோஷன் பேசியவை : ‘எங்கள் அழைப்பை ஏற்று இந்த விழாவிற்கு வந்த அனைவருக்கும் நன்றி . என்னை மனமார வாழ்த்திய அணைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் நன்றி . கண்டிப்பாக இந்த படம் அனைவருக்கும் பிடிக்கும் . உங்கள் ஆதரவு என்றும் எங்களுக்கு தேவை . பிரமாதமான இசையை தந்த ரகுநந்தன் அவர்களுக்கு நன்றி’ இவ்வாறு அவர் பேசினார் .

உற்றான்’ படத்தில் நாயகன் ரோஷன் , நாயகி ஹிரோஷினி , மற்றும் வெயில் பிரியங்கா இந்த படத்தில் நடித்து உற்றான் ப்ரியங்கா ஆகிறார் . முக்கியமான கதாபாத்திரங்களில் ரவிசங்கர் , வேலராமமூர்த்தி , மதுசூதனன் , ஜின்னா, கானா பாடல்களில் கலக்கும் ‘கானா’ சுதாகர், ’ஒரு கல் ஒரு கண்ணாடி’ புகழ் மதுமிதா, இயக்குநர் சரவணன் சக்தி, இமான் அண்ணாச்சி, விஜய் டிவி புகழ் கோதண்டம், ‘காதல்’ பட புகழ் சரவணன், சுலக்ஷனா ஆகியோர் நடித்துள்ளனர் .‘கும்கி’, ‘மைனா’, தடையறத் தாக்க’, ‘நிமிர்ந்து நில்’ ஆகிய படங்களில் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ஹாலிக் பிரபு இப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார் . இவர் பிரபல ஒளிப்பதிவாளர் சுகுமாரின் உதவியாளர்.

Facebook Comments

Related Articles

Back to top button