
அறிமுக இயக்குனர் சதீஷ் கர்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் ‘டைம் இல்ல’. இப்படத்தின் சென்சார் வேலைகள் அனைத்தும் முடிவடைந்த பிறகு, இப்படத்தில் இருந்து இயக்குனர் சதீஷ் கர்ணாவை எவ்வித காரணமும் இல்லாமல் படத்தில் இருந்து தூக்கியிருக்கிறார் தயாரிப்பாளர் மனுப்பார்த்திபன்.,
இதனால், இயக்குனர் சதீஷ் கர்ணா சென்னை கமிஷ்னர் அலுவலகத்திற்கு சென்று படத்தின் தயாரிப்பாளர் மீது புகார் அளித்துள்ளார். விரைந்து நடவடிக்கை எடுப்பதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஒரு இயக்குனருக்கு முதல் படம் என்பது எந்த மாதிரியான ஆரம்பம் என்பதை புரியாமல், அவர்களது வாழ்க்கையோடு விளையாடும் இம்மாதிரியான தயாரிப்பாளர்களை என்னவென்று சொல்வது.
விரைவில் நல்ல முடிவு எட்டப்படும் என்று எதிர்பார்ப்போம்..
Facebook Comments