
பல வருடங்களுக்கு முன்பே சினிமாவிற்கு அடியெடுத்து வைத்தாலும் இன்னமும் தமிழ் சினிமா மட்டுமல்லாது தென்னிந்திய சினிமாவிலும் கனவு கன்னியாக தான் திகழ்ந்து வருகிறார் த்ரிஷா.
விண்ணைத்தாண்டி வருவாயா ‘ஜெஸ்ஸி’யாக இருந்தாலும் சரி, 96 படத்தில் ஜானுவாக இருந்தாலும் சரி யாரும் அவ்வளவு எளிதில் மறந்தும் கடந்தும் செல்ல முடியாத கதாபாத்திரம் தான்.
சினிமாவிற்கு அடியெடுத்து வைக்கும் முன் அவருக்கான மூன்று ஆசைகள் இருந்தனர்.
அதுதான் தென்னிந்திய சூப்பர் ங்ஸ்டார்களுடன் நடிக்க வேண்டும் என்பது.
நடிகர் கமல்ஹாசனுடன் சேர்ந்து ” மன்மத அம்பு” படத்தில் நடித்து தனது முதல் ஆசையை நிறைவேற்றிக் கொண்டார்.
நடிகர் ரஜினியுடன் இணைந்து “பேட்ட” படத்தில் நடித்து தனது இரண்டாவது ஆசையையும் நிறைவேற்றிக் கொண்டார்.
“பாபநாசம் ” போன்ற வெற்றி படங்களின் இயக்குனர், அடுத்ததாக மோகன்லால் வைத்து ஒரு படத்தினை இயக்கவிருக்கிறார். இப்படத்தில் மோகன்லால் ஜோடியாக த்ரிஷா நடிக்கவிருக்கிறார். த்ரிஷாவின் மூன்றாவது ஆசையும் இதுவே, மோகன்லாலுடன் நடிக்க வேண்டும் என்பது
மூன்றாவது கனவும் நிறைவேற இருக்கும் மகிழ்ச்சியில் வானுக்கும் பூமிக்கும் துள்ளி குதித்துக் கொண்டிருக்கிறாராம் த்ரிஷா.