
லால்குடியை சொந்த ஊராக கொண்டவர் இவர் 50 ஆண்டுகளாக 600க்கும் அதிகமான திரைப்படங்கள், ஏராளமான நாடகங்களில் நடித்தவர்.
ஆனாலும் பின்னாளில் முதுமையும் வறுமையுமாகத்தான் மிகச்சிறிய வீட்டில் மனைவி, மகனுடன் வாழ்ந்து கொண்டிருந்தார்.
இவருடைய நகைச்சுவை நாடகங்கள் அந்த காலத்தில் நாற்பது வருடங்களுக்கு முன் பாப்புலர் . 1955-இல் தனது நண்பரும், நகைச்சுவை நடிகருமான நாகேஷ் நாடகக் குழுவின் நாடகங்களில் நடித்தார். 1959-ல் நெஞ்சே நீ வாழ்க எனும் மேடை நாடகத்தில் டைப்பிஸ்ட் கோபு எனும் கதாபாத்திரத்தில் நடித்ததால், கோபால ரத்தினத்திற்கு டைப்பிஸ்ட் கோபு அடைபெயர் நிலைத்து நின்றது.1965ல் கே. பாலசந்தர் இயக்கிய நாணல் எனும் திரைப்படத்தில் முதலில் அறிமுகமானார்.
பின்னர் சினிமாவில் சாது மிரண்டால் , அதே கண்கள் , எங்க மாமா போன்ற பல படங்களில் அந்த காலத்தில் வருவார் . இவருடைய கண்கள் , அகன்ற முகம் சிரிப்பு நடிகருக்கேற்ற அமைப்பு கொண்டது .
சோ வின் நண்பர் நடிகர் நீலுவும் டைப்பிஸ்ட் கோபுவும் ஒரே சாயல் என்பதால் ரசிகர்கள் படத்தில் நீலு வை பார்த்தால் டைப்பிஸ்ட் கோபு என்று நினைப்பார்கள் . டைப்பிஸ்ட் கோபுவை திரைப்படங்களில் பார்க்கும்போது நீலு என நினைத்து குழம்புவார்கள் .
டைப்பிஸ்ட் கோபு நாற்பது வருடங்களுக்கு முன் சென்னை கோபாலபுரத்தில் பூர்வீகமாக சொந்தமாக பெரிய பங்களா , இருநூறு பவுன் தங்க நகை , நிறைய வெள்ளி பாத்திரங்கள்,வேலையாட்கள் என்று நல்ல செழிப்பாக வாழ்ந்தவர் . இதை ஒரு பேட்டியில் பத்து பன்னிரண்டு வருடங்களுக்கு முன் சொல்லியிருந்தார் .
என்ன நடந்தது என்று குறிப்பிட்டு அவரால் சொல்லத் தெரியவில்லை . இத்தனைக்கும் அவருக்கு கெட்ட பழக்கங்கள் ஏதுமே கிடையாதாம் . 1975-இல் அவ்வளவு வசதி , வீடு ,நகைகள் எல்லாம் போய் விட்டதாம்.
பாலாபிஷேகம், சோப்பு சீப்பு கண்ணாடி, வா ராஜா வா, மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி, சிம்லா ஸ்பெஷல், கற்பூரம், அம்மாவும் நீயே அப்பாவும் நீயே, நாலும் தெரிந்தவன், சொந்தங்கள் வாழ்க,நத்தையில் முத்து, கல்லும் கனியாகும், தரிசனம், தேடி வந்த லெட்சுமி, சிவப்புச் சூரியன், பொண்ணு மாப்பிள்ளை, காசேதான் கடவுளடா, உரிமைக்குரல், ஒரு கைதியின் டைரி, உயர்ந்த மனிதன், கலாட்டா கல்யாணம், எங்கிருந்தோ வந்தாள், தேனும் பாலும், எங்க மாமா, வண்ணக்கனவுகள் போன்ற பல்வேறு படங்களில் நடித்தவர்
இவர் நடித்த மேலும் சில படங்கள்: அனுபவம் புதுமை [1967], தந்துவிட்டேன் என்னை [1991], முத்தான முத்தல்லவோ [1976], பத்தாம் பசலி [1970], பட்டணத்து ராஜாக்கள் [1982], வீட்டுக்கு ஒரு கண்ணகி [1981], வேலைக்காரன் [1987]





