
கேரளாவில் கொல்லம் மாவட்டத்தில் அஞ்சல் என்ற பகுதியை சேர்ந்தவர் உத்ரா சமீபத்தில் இறந்துவிட்டார்.
இவரது மரணம் குறித்த தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்ராவின் கணவர் சூரஜ். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
சூரஜ், நகைக்காகவும் இரண்டாவது திருமணம் செய்ய வேண்டும் என்பதற்காகவும் உத்ராவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
இதற்காக சில மாதங்களுக்கு முன் வீட்டில் விஷப் பாம்பை விட்டுள்ளார் சூரஜ். அப்போது உத்ராவை பாம்புகள் கொத்த, சிகிச்சைக்குப் பின் மீண்டார்.
அதன்பின், இரண்டாவது முறையாக உத்ராவை கொலை செய்ய, பத்தாயிரம் ரூபாய் பணம் கொடுத்து கருமூர்க்கன் என்ற கொடிய விஷத்தன்மை கொண்ட பாம்பு ஒன்றை வாங்கி வந்துள்ளார் சூரஜ்.
உத்ராவிற்கு ஆப்பிள் ஜுசில் மயக்க மருந்து கொடுத்து அவரை தூங்க வைத்துள்ளார் சூரஜ். பின் தான் எடுத்து வந்த விஷப்பாம்பை உத்ரா மீது வீசி எறிந்துள்ளார். அது இரண்டு முறை உத்ராவை கொத்தியுள்ளது.
விஷத்தன்மை அதிகம் கொண்ட பாம்பு என்பதால் உத்ரா, துடி துடித்து இறந்துள்ளார். இரவு 8 மணிக்கெல்லாம் உத்ரா இறந்தபோதும் விடிய விடிய அந்த பிணத்தின் அருகிலேயே இருந்துள்ளார் சூரஜ்.
சூரஜ் வனவிலங்கு ஆர்வலர்கள் குழுவில் ஒரு உறுப்பினராக இருந்து வருகிறார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
முதல்முறை உத்ரா பிழைத்து வந்ததுமே 2-வது முறை அவர் பிழைத்து விடக்கூடாது என்பதில் சூரஜ் உறுதியாக இருந்திருக்கிறார்.
கேரள போலீஸார் சூரஜ்ஜை கைது செய்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.