
V People Studio சார்பில் நேற்றைய தினம் ராதே கிருஷ்ணா விழாவானது சென்னை தி நகரில் உள்ள சார். பிடி தியாகராயர் அரங்கத்தில் நடைபெற்றது.
இதில், குழந்தைகளுக்கான Costume and Ramp Walk Contest நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக மக்கள் நீதி மய்யம் கட்சியினைச் சார்ந்த சிநேகா கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசும்போது, “ அநேக குழந்தைகள் கிருஷ்ணா, ராதா வேடம் அணிந்து இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளனர். போன், ஆன்லைன் என்று இருக்கக் கூடிய இந்த காலக்கட்டத்தில், பெற்றோர்கள் நேரம் ஒதுக்கி படிப்பினை தாண்டி இந்த மாதிரியான கூடுதலாக கற்றுக் கொள்ளும் திறன் மூலம் நேரத்தை செலவிடுவதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
இதன் மூலம், சமூகத்தில் மற்றவர்களிடம் எப்படி பழகுவது, வெற்றி தோல்வியை எப்படி அணுகுவது என்பதை இந்த மாதிரியான நிகழ்வுகள் குழந்தைகளுக்கு கற்றுத் தருகிறது. இந்த நிகழ்வை இவ்வளவு அழகாக நடத்தி வரும் விக்கி அவர்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைத்து பெற்றோர்களும் இந்த மாதிரியான நிகழ்வுகளுக்கு உங்கள் குழந்தைகளை அழைத்துச் செல்லுங்கள். அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள் என்பது என்னோட விருப்பம்.
குழந்தைகளை குழந்தைகளாக விடுவது நல்லது. எந்த விஷயத்தையும் கட்டாயப்படுத்தக் கூடாது. குழந்தைகளோட வயது மற்றும் மூளை வளர்ச்சி பொருத்து அவர்களுக்கு என்ன மாதிரியான விஷயங்களில் ஈடுபாடு இருக்கிறதோ, அதில் குழந்தைகளை செலுத்துவது நல்லது. அந்த மாதிரியான ஒன்றுக்கு பெற்றோர்கள் உதவிகரமாக இருக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் குழந்தைகளை நிறைய பேர் ஃபோர்ஸ் பண்ட்றாங்க. அப்படி பண்ணக் கூடாதுன்னு நினைக்கிறேன்.” என்று கூறினார்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் நூற்றுக்கும் அதிகமான குழந்தைகள் கிருஷ்ணர் மற்றும் ராதா வேடங்கள் அணிந்து ரேம்ப் வாக்-கில் நடந்து வந்தனர்.
அனைவருக்கும் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. விழாவின் இறுதியில் V People Studio சார்பில் விக்கி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். மேலும், இந்த நிகழ்வானது தொடர்ச்சியாக நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.






