Spotlightசினிமா

யார் இந்த சீயான்கள்..?? விளக்குகிறார் இயக்குனர் வைகறை பாலன்!

இயக்குனர் வைகறை பாலன் இயக்கத்தில் உருவாகி வருகிறது ‘சீயான்கள்’. இப்படத்தினை பற்றி இயக்குனர் கூறும்போது, “நான் வளரும்போது பார்த்த விஷயங்களை அடிப்படையாக கொண்டது தான் இந்த படம். இந்தப் படத்தில் 70 புதிய முகங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறோம், மேலும் அவர்கள் அனைவருக்கும் நீண்ட காலத்திற்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. 4 அல்லது 5 பிரபலமான முகங்கள் தவிர, அவர்கள் அனைவரும் புதியவர்கள். தேனியிலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் படம் எடுத்தோம். அத்தகைய நீண்ட தூரத்துக்கு நாங்கள் பயணிக்க வேண்டியிருந்தது, தினமும் 2- முதல் 3 மணி நேரம் மட்டுமே படம் பிடிக்க முடிந்தது” என்றார்.

படத்தின் தலைப்பு “சீயான்கள்” மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றி குறிப்பிடுகையில், “சீயான் என்பது தென் தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில், வயதானவர்களை அழைக்க வழக்கத்தில் இருக்கும் ஒரு வார்த்தை. இங்குள்ள மக்களின் மகிழ்ச்சி, வலி மற்றும் உணர்வுகளை உள்ளடக்கிய அழகான வாழ்க்கையை திரையில் காட்ட நாங்கள் முயற்சித்திருக்கிறோம்” என்றார்.

KL ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் கரிகாலன் தயாரித்துள்ள இந்த படம் 70 நாட்களில் படம் பிடிக்கப்பட்டு, தற்போது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. I.E.பாபுகுமார் (ஜீரோ புகழ்) ஒளிப்பதிவு செய்ய, மப்பு ஜோதி பிரகாஷ் (கொடி புகழ்) படத்தொகுப்பு செய்திருக்கிறார்.

Facebook Comments

Related Articles

Back to top button