
நேற்று நடந்த ஐபிஎல் போட்டிக்கு நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு மெசேஜ் ஒன்றை பதிவு செய்தார். அதில்
”என்னய்யா இது . பல்லாண்டு வாழ்க படத்துல வாத்தியாரு லதாவை தடவினதை விட அதிகமா தடவுறாங்க. “#CSK 81 -3 (14 overs)” இது தான் அது
கஸ்தூரியின் இந்த கமெண்ட், நடிகை லதாவை உசுப்பி விடவே அவர் கொந்தளித்து விட்டார்.
“நாவை அடக்கு.இல்லேன்னா அடக்குவேன்” என்கிற ரீதியில் கிளம்பி விட்டார்.
“என்கூட நல்லாத்தான் பழகிட்டிருந்தா..என்னாச்சுன்னு தெரியல. எம்.ஜி.ஆர்.ரசிகர்கள் அப்படியே கொதிச்சுப் போயிருக்காங்க. எனக்கு போன் மேல போன் வருது.
கஸ்தூரி எங்களை விட நல்லா நடிக்கிறே. ஒத்துக்கிறேன். எதுக்கு அநாவசியமாக மக்கள் திலகத்தை இழுக்கிறே.! நல்ல பொண்ணா நாவை அடக்கிட்டு இரு, இல்லேன்னா கடும் விளைவுகளை சந்திக்கநேரிடும். தலைவர் எம்.ஜி.ஆரின் ரசிகர்களின் கோபத்துக்கு ஆளாகதேன்னு எச்சரிக்கிறேன்” என்கிறார் லதா.





