Spotlightவிமர்சனங்கள்

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா – 2.5/5

 

கதைப்படி நாயகன் ரியோவும் ஆர் ஜே விக்னேஷும் நெருங்கிய நண்பர்கள். யூ டியூப்பில் பெரிதாக சாதிக்க வேண்டும் என்று துடிக்கும் இளைஞர்கள். தான் கஷ்டத்தில் இருந்தாலும், அவர்களை சந்தோஷப்படுத்தி பார்க்க வேண்டும் என்று துடியாக இருப்பவர் அரவிந்த்.

ஒருமுறை யூ டியூப் ப்ராங்க் ஷோ நிகழ்ச்சிக்காக மிகப்பெரும் கோடிஸ்வரரான ராதாரவியை சந்திக்கின்றனர் ரியோ மற்றும் விக்னேஷ்காந்த். இவர்களின் ஒரு சில நடவடிக்கைகளை வைத்து தான் கொடுக்கும் மூன்று விதமான டாஸ்க்குகளை முடித்தால் பல கோடிகளை தருவதாக ரியோ மற்றும் ஆர் ஜே விக்னேஷ்காந்திற்கு செக் வைக்கிறார் ராதாரவி.

அது என்னமாதரியான டாஸ்க். ?? அந்த டாஸ்க்கினை அவர்களை முடித்தார்களா..?? எதற்காக ராதாரவி அவர்களுக்கு டாஸ்க்குகளை கொடுத்தார் என்பதை மீதி படத்தில் சொல்கிறார்கள்..

இப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகியிருக்கும் ரியோ கோலிவுட்டிற்கு நல்ல ஒரு வரவுதான் என்றாலும், ஒரு சில இடங்களில் அவரது நடிப்பு நடிப்பாகவே இருப்பது படத்திற்கு சற்று பின்னடைவு தான். இன்னும் கொஞ்சம் பயிற்சி எடுத்துக்கோங்க ஹீரோ சார்..

விக்னேஷ்காந்த் அடிக்கும் காமெடிகள் ஒரு சில இடங்களில் எடுபட்டாலும், பல இடங்களில் எரிச்சலைத் தான் வரவைத்தது. அப்பா மகள் உறவை தவறான கோணத்தில் சித்தரித்து காமெடி என்ற பெயரில் செய்யும் கொடூரத்தை என்னவென்று சொல்வது….

ஒரு சில காட்சிகளை ஹீரோயினுக்கு வைக்க வேண்டுமே என்ற தோணியில் காட்சிகளை திணித்திருப்பது சற்று எரிச்சலடைய வைத்திருக்கிறது.

மக்களை முட்டாள்கள் என்று பல முறை திருப்பி திருப்பி கூறி கடுப்பேற செய்கிறார் நாஞ்சில் சம்பத்.

யு கே செந்தில்குமாரின் ஒளிப்பதிவு சற்று ஆறுதல்.

ஷபீர் இசையில் பாடல்களை ஓகே ரகம், பின்னனி இசை கதையோடு பயணம்.

படத்தின் கதை ஆங்காங்கே சிதறியிருப்பதும், ஒரு கோர்வையாக கதையை கூறாமல் போனதும் படத்திற்கு பெரிய சறுக்கல் தான் ….

அதுபோக, படத்தில் ராதாரவி தவிர மற்ற அனைவரும் கதாபாத்திரத்திரமாக செட் ஆகாமல் போனது, படத்திற்கு மிகப்பெரும் மைனஸ் தான் …

படத்தை தயாரித்த சிவகார்த்திகேயனுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்….

நெஞ்சமுண்டு நேரமுண்டு ஓடு ராஜா – ஆள விடுங்கப்பா சாமிகளா… முடியல

Facebook Comments

Related Articles

Back to top button