Spotlightசினிமா

தனுஷின் ‘கர்ணன்’… சமூக வலைதளங்களை அதிர வைத்த அந்த ஒரு ‘போட்டோ’!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தை முடித்த கையோடு மாரி செல்வராஜ்ஜின் ‘கர்ணன்’ படத்தின் படப்பிடிப்பிற்கு சென்றுவிட்டார் நடிகர் தனுஷ்.

இதன் படப்பிடிப்பு தற்போது தென் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. கிராம வாழ்க்கையை பின்னனியில் கொண்ட இந்த படத்தில் தனுஷ் முழுவீச்சில் நடித்து வருகிறார்.

இப்படத்தை தயாரித்து வருகிறார் கலைப்புலி எஸ் தாணு.

சற்று நேரத்திற்கு முன், தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் கர்ணன் படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை பரிந்துள்ளார்.

தனுஷ் ஒரு பாறை மீது வாள் வைத்து நிற்கும் காட்சி கொண்ட அந்த புகைப்படம் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது. தனுஷ் ரசிகர்கள் பலரும் இந்த போட்டோவை பகிர்ந்து வருகின்றனர்.

விரைவில் இதன் படப்பிடிப்பு முடிவடையும் என தெரிகிறது.

Facebook Comments

Related Articles

Back to top button