Spotlightசினிமாதமிழ்நாடு

மே 3க்கு பிறகு ஊரடங்கு தளர்வா…? நீட்டிப்பா…?

மே 3க்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா அல்லது தளர்த்தப்படுமா என்பது குறித்த ஆலோசனை கூட்டத்தொடரை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நடத்தினார்.

இதில், மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் காணொளியில் ஆலோசனை நடத்தினார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

பாதிப்பு அதிகமாக உள்ள மாவட்டங்களில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை தொடர்பாக அறிவுரைகளை ஆட்சியர்களுக்கு முதல்வர் அறிவித்தார்.

அப்போது, ‘சென்னையை தவிர்த்த மற்ற மாவட்டங்களில் நோய் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது

சென்னை பெரிய நகரம், மக்கள் அதிகம் உள்ளதால் பாதிப்பு அதிகம்

அரசின் வழிமுறைகளை பின்பற்றினால் கொரோனாவை முழுமையாக தடுக்கலாம்

கிராமப்புறங்களில் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது

நகர்ப்புறங்களில் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது

நெருக்கடியான நிலையில் சிறப்பாக பணியாற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு பாராட்டு

மாவட்ட ஆட்சியர்களின் சிறப்பான பணியால் அத்தியாவசிய பொருட்கள் தங்குதடையின்றி கிடைக்கின்றன

போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையால் கொரோனா தொற்று கட்டுக்குள் உள்ளது

வெளிநாடுகளில் உணவுக்கு மக்கள் போராடும் நிலை உள்ளது. தமிழகத்தில் அந்த நிலை இல்லை

அம்மா உணவகங்கள் மூலம் மக்கள் பசியாறுகின்றனர்

காய்கறி சந்தைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்க ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

கிருமி நாசினி அனைத்து பகுதிகளிலும் தெளிக்க வேண்டும்

நகர பகுதிகளில் உள்ள கழிப்பறைகளை தினமும் 3 முறை சுத்தம் செய்ய வேண்டும்

ரேஷன் கடை பொருட்களுக்கு டோக்கன் வழங்கப்படுகிறது

டோக்கனில் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே ரேஷன் கடைக்கு செல்ல வேண்டும்

டோக்கன் கொடுக்கின்ற நோக்கமே கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காகத்தான்

டோக்கன் வழங்கும் போதே அதுகுறித்த வழிமுறைகளை மக்களுக்கு தெளிவாக எடுத்துரைக்க வேண்டும்

மண்ணெண்ணெய் வழங்கும் நிலையங்களிலும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வலியுறுத்த வேண்டும்

விவசாய பொருட்கள் சந்தைப்படுத்துவதற்கு எவ்வித தடையும் இருக்கக் கூடாது

விவசாய பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களை தடுக்க கூடாது

விவசாய விதை பொருட்களை வைப்பதற்கு கிடங்குகளை தயார் நிலையில் வைக்க வேண்டும்

உணவு பதப்படுத்துதல், உற்பத்தி ஆலைகளுக்கு எந்த ஒரு இடையூறும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்

கிராமப்புறங்களில் 100 நாள் வேலை திட்டத்தை அமல்படுத்தும் போது, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்

100 நாள் பணியின் போது, கூட்டம் சேராமல் சரியாக பிரித்து வேலை வழங்க வேண்டும்

58 வயதுக்கு மேற்பட்டோரை 100 நாள் வேலை வாய்ப்பில் ஈடுபடுத்தக் கூடாது

தடை செய்யப்பட்ட பகுதியில் இருந்து யாரும் வெளியே வரவும் கூடாது. உள்ளே செல்லவும் கூடாது

தடை செய்யப்பட்ட பகுதியில் தினமும் 2 முறை கிருமி நாசினி தெளிக்க வேண்டும்

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் அறிவுரை

நோய் பாதிப்பு பகுதிகளை சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என மத்திய அரசு பிரித்துள்ளது

பச்சை பகுதிகளில் தொழில் தொடங்க அரசு படிப்படியாக அறிவிப்பை வெளியிடும்

அரசின் ஊரடங்கு தளர்வை மாவட்ட ஆட்சியர்கள் சரியாக அமல்படுத்த வேண்டும்

தமிழகத்தில் தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமே பச்சை பகுதிக்குள் உள்ளது

அனைத்து பகுதிகளையும் பச்சை மண்டலமாக மாற்றுவது மக்கள் கையிலேயே உள்ளது

கொரோனா தொற்று குறைந்தால் மட்டுமே தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்பும்.’ என்று கூறியுள்ளார்.

Facebook Comments

Related Articles

Back to top button