
சென்னையில் எந்தவித அறிகுறியும் இல்லாமல் 98% பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, ‘ சென்னையில் 98%பேருக்கு எந்த வித அறிகுறியும் இல்லாமல் கொரோனா தொற்று இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 768 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
பாதுகாப்பு நலன் கருதி கோயம்பேடு மார்க்கெட்டில் சில்லறை விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.
விலைவாசிகளை ஏற்றி வைத்து விற்றால் ஆய்வு செய்து நடவடிக்கைகள் எடுக்கப்படும்.’ என்று தெரிவித்தார்.
Facebook Comments




