Spotlightசினிமாதமிழ்நாடு

கோயம்பேடு விவகாரத்தில் தமிழக அரசின் அலட்சியத்தால் நோய்த்தொற்று அதிகரித்தது… மு க ஸ்டாலின் சரமாரி கேள்வி!

மிழகத்தில் கொரோனா பரவல் குறித்து தமிழக சட்டப்பேரவையின் எதிர்கட்சி தலைவர் மு க ஸ்டாலின் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார்.

அவர் கூறும்போது,

உயிருக்கும், வாழ்வாதாரத்திற்கும் மக்கள் போராடி வருகின்றனர்; பரிசோதனைகளின் எண்ணிக்கையை உயர்த்தியும் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் போனது ஏன்?

கோயம்பேடு சந்தை விவகாரத்தில் தமிழக அரசின் அலட்சியத்தால் நோய்த்தொற்று அதிகரித்தது; தமிழகத்தில் 95% தொற்று மாநிலத்திற்கு உள்ளேயே ஏற்பட்டுள்ளது.

1. சமூக பரவலே இல்லை என்பது உண்மை என்றால் தொற்று அதிகரிக்க காரணம் என்ன?

2. கொரோனாவை அறவே ஒழிப்போம் என்ற பொய் பேட்டிகளை தருவதை விட்டு, செயல்திட்டம் எப்போது அமைப்பீர்கள்?

3. மக்களை எத்தனை நாளைக்கு ஏமாற்றப் போகிறீர்கள்?

4. முக்கிய எதிர்க்கட்சிகளை கலந்து ஆலோசிக்க தொடர்ந்து மறுத்து வருவதன் காரணம் என்ன?

5. வேலைவாய்ப்பு, பொருளாதாரம் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகளில் அரசு ஆர்வம் காட்டுவது எப்போது?

5 கேள்விகளை மக்கள் சார்பாக நான் கேட்டுள்ளேன்

என்று கூறியுள்ளார்.

Facebook Comments

Related Articles

Back to top button