
பாசில் ஜோசப் உருவாக்கும் ‘மின்னல் முரளி’ திரைப்படத்தில் டோவொஇனோ தாமஸ் நாயகனாக நடிக்க சமீர் தாஹீர் ஒளிப்பதிவு செய்ய ஹாலிவுட் புகழ் விலாட் ரிம்பர்க் சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்றுகிறார்.
வீக்கெண்ட் ப்ளாக்பஸ்டர் (Weekend Blockbuster ) நிறுவனத்தின் மிகப்பெரும் படைப்பாக , நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில், பன்மொழியில் உருவாகும் சூப்பர் ஹீரோ படமான “மின்னல் முரளி” படத்தின் விறுவிறு, அதிரடி டீஸரை ஐந்து மொழிகளில் வெளியிட்டுள்ளது.
வீக்கெண்ட் ப்ளாக்பஸ்டர்நிறுவனம் மிகப்பெரும் பட்ஜெட்டில் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தை ஹிந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என ஐந்து இந்திய மொழிகளில் நேரடியாக வெளியிடுகிறது.
சமீபத்தில் வெளியான ஃபர்ஸ்ட் லுக் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், சில தினங்களுக்கு முன் வெளியான டீசர் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மிகப்பெரும் பட்ஜெட்டில் உருவாகும் இப்படைப்பை Weekend Blockbuster ) வீக்கெண்ட் ப்ளாக்பஸ்டர் நிறுவனம் சார்பில், ஷோபியா பால் தயாரிக்கிறார். பாசில் ஜோசப் இயக்கும் இத்திரைப்படத்தை சமீர் தாஹீர் ஒளிப்பதிவு செய்கிறார். ஹாலிவுட் புகழ் விலாட் ரிம்பர்க் சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்றுகிறார்.
https://www.youtube.com/watch?v=pxDynq9hAXE
பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் நடிப்பில் உருவான ஜெமினி மேன், தி லாஸ்ட் விட்ச் ஹண்டர், நெட்ப்ளிக்ஸ் லூசிஃபர், டெல் /டேல் சீரிஸ், பாகுபலி 2, சல்மான் கான் நடிப்பில் சுல்தான் போன்ற மிகப்பெரும் படைப்புகளில் சண்டைப்பயிற்சி இயக்குநராக இவர் பணியாற்றியுள்ளார்.
“மின்னல் முரளி” முழுக்க முழுக்க கேரள கிராமப்புறங்களில் மற்றும் இதுவரை கேமராவே பார்த்திராத லோகேஷன்களில் படமாக்கப்பட்டு வருகிறது. உயர்தரமிக்க நடிகர் குழுவான குரு சோமாசுந்தரம், அஜு வர்கீஸ், ஃபெமினா ஜார்ஜ், சினேகா பாபு, ஷெல்லி நபுகுமார், P பாலசந்திரன், பய்ஜு சந்தோஷ், சுர்ஜித், ஹரிஶ்ரீ அசோகன், மாமுக்கோயா, பிஜுகுட்டன், மற்றும் பல திறமைமிகு நடிகர்கள் டொவினோ தாமஸுடன் இணைந்து நடிக்கிறார்கள்.
படத்தின் 80 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்கு பின்னர் மீதமுள்ள படப்பிடிப்பை முடிக்க காத்திருக்கிறது படக்குழு. தற்போது போஸ்ட்புரடக்ஷன் பணிகள் கொரோனா எச்சரிக்கைகள் பின்பற்றப்பட்டு தீவிரமாக நடைபெற்று வருகிறது.




