
அதர்வா நடிப்பில் ஆர் கண்ணன் இயக்கத்தில் வெளிவந்த ‘பூமராங்’ மிகப்பெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து மீண்டும் அதர்வாவோடு அடுத்த படத்தில் இணைந்திருக்கிறார் ஆர் கண்ணன்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தினை தொடர்ந்து ஆர் கண்ணன் சந்தானத்தோடு கைகோர்க்கவிருக்கிறார். இப்படத்தின் பூஜை நேற்று சென்னை பாரிமுனை காளிகாம்பாள் கோவிலில் நடைபெற்றுள்ளது. இப்படத்தை அடுத்த ஆண்டு ஃபிப்ரவரி மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
எம்.கே.ராம் பிரசாத் படத்தை தயாரிக்க இதில் ஸ்டண்ட் சில்வா, ஆர்.கே.செல்வா, சண்முக சுந்தரம், ராஜ்குமார், ஜான்சன் ஆகியோரும் இணைந்துள்ளனர்.
Facebook Comments





